×
 

4 டன் மிளகாய் பொடி வாபஸ்: சாமியார் பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் திரும்பப் பெற காரணம் என்ன?

மிளகாய் பொடி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பூச்சி கொல்லி மருந்துகள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

யோகா குரு சாமியார் பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த மிளகாய் பொடி உணவுப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததால் 4 டன் மிளகாய் பொடியை சந்தையில் இருந்து திரும்பப்பெற அந்த நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு நிறுவனம், பதஞ்சலி நிறுவத்தின் குறிப்பிட்ட சிவப்பு மிளகாய் பொடியை ஆய்வு செய்தத்தில் உணவுப் பாதுகாப்பு விதிகள் எதையும் கடைபிடிக்கவில்லை எனத் தெரியவந்தது.


இதையடுத்து, 200 கிராம் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில், சந்தைகளில் விற்கப்பட்டுவரும் “சிவப்பு மிளகாய் தூள்” அனைத்தையும் உடனடியாக பதஞ்சலி நிறுவனம் திரும்பப் பெறுகிறது என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் அஸ்தானா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறுகையில் “ பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் குறைந்த அளவுதான் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்த அனுமதிக்ககப்பட்டது. ஆனால், மிளகாய் பொடி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ததில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பூச்சி கொல்லி மருந்துகள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: சிபிஐ விசாரணை தேவையில்லை.. இதைப் பண்ணாலே போதும்.. வேங்கைவயல் வழக்கில் விஜய் புது ஐடியா.!


ஆதலால் உடனடியாக நடவடிக்கை எடுத்த எங்கள் நிறுவனம் சந்தையில் விற்பனைக்கு இருந்த அனைத்து மிளகாய் பொடி பாக்கெட்டுகளையும் திரும்பப் பெறவும், நுகர்வோர் வாங்கியிருந்தால் அதைகடைகளில் கொடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக விளம்பரங்களும் செய்துள்ளோம். வேளாண் பொருட்களைசப்ளை செய்யும் நிறுவனத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கிறோம். எப்எஸ்எஸ்ஏஐ அமைப்பின் விதிகளுக்கு கட்டுப்படுவோம். சந்தையில் விற்பனையில் இருக்கும் 4 டன் மிளகாய் பொடியை திரும்பப் பெறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


1986ம் ஆண்டு பாபா ராம்தேவால் பதஞ்சலி ஆயுர்வேத குழுமமாகத் தொடங்கப்பட்டு, பதஞ்சலி உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக மாறியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ருச்சி சோயா நிறுவனத்தையும் பதஞ்சலி வாங்கியது.

இதையும் படிங்க: திமுக ஒரு நாடக கம்பெனி.. கருணாநியை மிஞ்சும் திரைக்கதை.. திமுக அரசை டாராகக் கிழித்த அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share