×
 

தீவிரவாத தாக்குதல்: உயிரிழந்த கடற்படை அதிகாரி.. ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஹரியானா அரசு..!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வால் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என சரியான அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஹரியானவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. தேனிலவு கொண்டாடுவதற்காக காஷ்மீர் சென்று இருந்த போது தான் தீவிரவாத தாக்குதலில் வினய் இறந்துள்ளார். 

மனைவியின் கண் முன்னே அவரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்திய சம்பவம் அனைவரையும் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியது. தன் கணவன் இறந்த நிலையில் கிடப்பதை அருகில் அமர்ந்து செய்வதறியாது அவரது மனைவி இருக்கும் புகைப்படமும் வெளியாகி நெஞ்சை குமுற செய்தது. 

இதையும் படிங்க: பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..!

இந்த நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வால் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லஷ்கர் அமைப்பின் முன்னணி தளபதி சுட்டுக் கொலை..! இந்திய ராணுவம் அதிரடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share