தங்க சுரங்கமே புதையலாக கிடைத்த அதிசயம்...எங்கே தெரியுமா?
எகிப்து நாட்டில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தங்க சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தங்க சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்ட எகிப்து தொல்லியல் ஆய்வுகளில் பெயர் பெற்றது. அங்குள்ள பிரமிடுகள், ஃபாரோக்களின் வரலாற்றை ஆய்வு செய்வதில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இருந்தான் எகிப்து பகுதியில் தங்க நகரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மார்சா ஆலமின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜபல் சுகாரியில் பழங்கால வரலாறு குறித்து தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இராணுவ விமானம் வெடித்து பயங்கர விபத்து..! 46 பேர் உயிரிழந்த சோகம்..!
சுமார் 4 ஆண்டுகளாக நடந்து வரும் அகழ்வாராச்சியில் புதையலே கிடைத்துள்ளது. அதாவது கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. தங்க சுரங்கத்தில் தொடர்புடைய தொழிற்துறை மையத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
லாஸ்டி சிட்சி ஆஃப் கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த நகரத்தில் டோலமிக் காலத்தை சேர்ந்த பழங்கால நாணயங்கள் உட்பட அரிய கலைப்பொருட்களும் கிடைத்துள்ளன. மேலும் அங்கு தங்கத்தை தூளாக்க பயன்படுத்தும் நிலையங்கள், வடிகட்டும் படுகைகள், தங்கத்தை உருக்க பயன்படுத்தும் களிமண் உலைகள் முதலியவையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி தங்கத்தின் தொழிற்கூடமாக இருக்க கூடும் என நம்பப்படுகிறது. மேலும் தங்க சுரங்கத்தின் தொழிற் கூடம் இருக்கும் பகுதியில் கல்வெட்டும் கிடைத்துள்ளது. அதில் அங்கு வசித்த மக்களின் அன்றாட வாழ்க்கை முறை, நிர்வாகம், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் தகவல்கள் அடங்கியுள்ளன.
இதையும் படிங்க: இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை.. சலுகைகளை வாரி இறைத்த நாடு எது.?