சிகிச்சைக்காக 2 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தானியர்.. இக்கட்டான சூழலால் பரிதவிக்கும் தந்தை..!
இந்தியாவில் சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளை அழைத்து வந்த ஒரு பாகிஸ்தானிய தந்தை மிகுந்த பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இந்தியாவில் சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளை அழைத்து வந்த ஒரு பாகிஸ்தானிய தந்தை மிகுந்த பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை வளர்த்துவிடுவதில் ஆர்வம் காட்டும் பாகிஸ்தானில் அடிப்படை வசதிகளுக்குப் பற்றாகுறைதான். குறிப்பாக உயர்தர மருத்துவமனைகளோ, அதிநவீன சிகிச்சைகளோ இன்னும் பாகிஸ்தானில் குதிரைக் கொம்புதான். இதுபோன்ற சிகிச்சைகளுக்கு வெளிநாடுகளைதான் பாகிஸ்தான் சார்ந்திருக்கிறது. அந்த வகையில் அண்டை நாடான இந்தியாவுக்கு வந்து சிகிச்சை மேற்கொள்ள பாகிஸ்தானியர்கள் வருவது வழக்கம்.
அந்த வகையில் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பாகிஸ்தானியர், தனது இரண்டு குழந்தைகளை ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். அடுத்த வாரம் இக்குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள திட்டமிருந்தது. ஆனால் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
இதையும் படிங்க: நாங்க அணு ஆயுத நாடு..எதுக்கும் பயப்பட மாட்டோம்.. பாகிஸ்தான் துணை பிரதமர் திமிர் பேச்சு.!
அட்டாரி - வாஹா சோதனைச் சாவடியை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டது. 'சார்க்' விசா சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் பலரும் பரிதவிப்பில் உள்ளனர். அதில் இரண்டு குழந்தைகளின் தந்தையும் ஒருவர்.
இதுதொடர்பாக அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ''எந்னுடைய 9 மற்றும் 7 வயது குழந்தைகள் இருவரும் பிறவி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வசதிகள் பாகிஸ்தானில் இல்லை. டெல்லியில் உயர்தர சிகிச்சை இருப்பதால் குழந்தைகளை அழைத்து வந்துள்ளேன். அவர்களின் அறுவை சிகிச்சை, அடுத்த வாரம் நடக்க உள்ளது. குழந்தைகள் நலமுடன் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், பஹல்காம் சம்பவத்துக்குப் பின், நாங்கள் உடனடியாக பாகிஸ்தான் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளோம். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. மருத்துவர்கள் குழந்தைகளை நன்கு கவனிக்கின்றனர். எனது குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நான், இரு நாட்டு அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி ஐசிசி தொடர்களில்கூட இந்தியா - பாகிஸ்தான் விளையாட கூடாது.. சவுரவ் கங்குலி கடும் ஆட்சேபம்.!!