வெயில் சூட்டை தணிக்க முதல்வர் செய்த செயல்.. டெல்லி கல்லூரியில் வினோதம்!!
வெயிலின் தாக்கத்தை குறைக்க கல்லூரி முதல்வர் வகுப்பறைகளில் உள்ள சுவற்றில் மாட்டு சாணத்தை பூசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இந்தியாவில் இன்று குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகப்பட்ச வெப்ப நிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் அதிகபட்ச வெப்பநிலை 44.0 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5 டிகிரி அதிகமாகும்.
ராஜஸ்தானில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வெப்ப அலையின் தீவிரம் மற்றும் பரவல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஜோத்பூர், பிகானீர் மற்றும் ஷேகாவதி பகுதிகளின் பல பகுதிகளை பாதிக்கும். சில பகுதிகளில், தீவிர வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, குறிப்பாக எல்லை மாவட்டங்களில் வெப்பநிலை 45-46 டிகிரியை எட்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவூர் ராணா நாளை டெல்லி அழைத்து வரப்படுகிறார்: பாட்டியாலா நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!
இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி ஒன்றில் அதன் முதல்வர் மாட்டு சாணத்தை வகுப்பறைகளில் உள்ள சுவற்றில் பூசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்திற்கு லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரத்யூஷ் வத்சலா, அவரே தன்னுடைய கைகளால் வகுப்பறைகளில் உள்ள சுவற்றில் மாட்டு சாணத்தை பூசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
பின்னர் இது குறித்து பேசிய கல்லூரி முதல்வர் பிரத்யூஷ், சுவர்களில் சாணம் பூசியது, இந்திய பாரம்பரியத்தை பயன்படுத்தி வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்துவது குறித்து கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆய்வின் ஒரு பகுதியாகும். தொடர்ந்து அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு ஒரு வாரத்தில் முடிந்து விடும்.
அதன் பிறகு இது பற்றி விளக்கமாக கூறுகிறேன். ஒரு சுவற்றின் ஒரு பகுதியில் நானே சாணத்தை கைகளால் பூசினேன். இயற்கையான சாணத்தை கையில் தொடுவது எந்த தீங்கையும் கொடுக்காது. சிலர் இதுபற்றி தெரியாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: விடாது துரத்தும் நிலநடுக்கம்! நேபாளத்தில் குலுங்கிய கட்டடங்கள்..! அரண்டு போன மக்கள்..!