தவெக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட்..? விளக்கமளித்த கட்சித் தலைமை..!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விளக்கம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக அர்ஜுனா செயல்பட்டு வருகிறார். அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரவி இருந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக- திமுகவுக்கு எதிராக ஆக்ரோஷம்… ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்ஸி பரபர அறிக்கை..!
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா சில மாதங்களுக்கு முன்பு விஜயை சந்தித்துப் பேசினார். பிறகு கட்சியில் இணைந்த அவருகு தமிழக வெற்றி கழகத்தில் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சியின் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை ஆதவ் அர்ஜூனாவும், அவரது நிறுவனமே ஒருங்கிணைத்து வருகிறது. சமீபத்தில் நடந்த இப்தார் நோன்பு விழாவைக் கூட அவரது நிறுவனம் தான் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் பரவி வந்தது. அந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை. அடிப்படை ஆதாரமற்றது. வெறும் வதந்தி என்று தமிழக வெற்ரிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்து சென்னையில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள தவெகவின் பொதுக்குழு கூட்டப்பணிகளுக்கான வேலைகளில் ஆதவ் அர்ஜூனா ஈருபட்டுருகிறார். ஆகையால், ஆகையால் அவர், கட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை அது வெறும் வதந்தி மட்டுமே என்று தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினும் விஜய் ரசிகர்தான்.. ஆதவ் அர்ஜுனா பேசிய பேண்ட் சர்ட் மேட்டர்..!