அல்ட்ரா மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளா இப்படி? என ரசிகர்கள் வாய் பிளக்கும் வகையில் அதிதி ஷங்கர் அல்ட்ரா மாடர்ன் உடையில், போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
இயக்குனர் ஷங்கர் என்று கூறியதும் பலருக்கும் நினைவுக்கு வருவது, அவருடைய படங்களில் இடம்பெறும் பிரமாண்டமான காட்சிகள் தான். இதன் காரணமாகவே கோலிவுட் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தார்.
அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர், இதை தொடர்ந்து இயக்கிய காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, உள்ளிட்ட படங்கள் அணைத்தும் ஹிட்டடித்தது.
இதையும் படிங்க: முரட்டு பார்வை! மூட் அவுட் செய்யும் அழகில் அதிதி ஷங்கர்!
இதுவரை தோல்வியே கண்டிடாத இயக்குனர் என பெயர் எடுத்த இயக்குனர் ஷங்கருக்கு, முதல் தோல்வியை கொடுத்தது இந்தியன் 2 திரைப்படம்.
1996-ஆம் ஆண்டு, கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியாகி தமிழ் சினிமாவில் தரமான வெற்றியை பதிவு செய்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் 2024-ல் வெளியானது.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதத்தில் இதன் திரைக்கதை அமைந்ததே இப்படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இதை தொடர்ந்து ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை ஷங்கர் இயக்கி உள்ளார். ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் ஒரு புறம் திரையுலகில் கலக்கி கொண்டிருக்க, இவரை தொடர்ந்து இவரின் மகள் அதிதி ஒருபுறம் நடிகையாக மாறி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில்... சூர்யா தயாரிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி.
இதன் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது முரளியின் 2-ஆவது மகன் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நேசிப்பாயா என்கிற படத்தில் நடித்துள்ளார்.
விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இவரின் கைவசம் ஒன்ஸ் மோர், மற்றும் பைரவம் ஆகிய படங்கள் உள்ளன. தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அதிதி, அவ்வப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் சில புகைப்பங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தான், ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடுவது போல்... அல்டரா மாடர்ன் உடையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.
இதையும் படிங்க: கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்!