×
 

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான தேர்தல் வழக்கு.. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..!

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான தேர்தல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில்,  சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் எப்படி உள்ளது..? ஒரு வாரத்தில் பதில் அளிக்கப்படும்.. தமிழக அரசு உறுதி..!

அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதி உத்தர்விட்டார்.

இதையும் படிங்க: நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 வரை ஆன்லைன் ரம்மிக்கு NO.. இது ஒழுங்குமுறை அல்ல தடை என வாதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share