ஜெயலலிதா உடன் பேச வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்..! அதிர வைத்த மோடியின் திடீர் அறிக்கை..!
ஜெயலலிதா உடன் பேச வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம் என உருக்கமாக பேசியுள்ளார் பிரதமர் மோடி.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் 77வது பிறந்த தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் செல்வி ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்வி ஜெயலலிதா குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜெயலலிதாவின் நினைவலைகளை உருக்கமாக பகிர்ந்து உள்ளார்.
ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு இரக்கம் உள்ள தலைவராகவும் சிறந்த நிர்வாகியாகவும் அவர் பரவலாக போற்றப்படுகிறார் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அவருடன் தொடர்பு கொண்டு பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம் என கருதுகிறேன். மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு அவர் எப்போதும் அன்பாகவும் ஆதரவாகவும் செவி சாய்த்து இருந்துள்ளார் என மோடி தனது நினைவு கூரல் அறிக்கையில் உருக்கத்தோடு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதுதாண்டா மோடி..! 10,12 -ம் வகுப்பு தேர்வு பாதிக்கப்படக்கூடாது.. 15 நிமிடம் தனது கான்வாயை தாமதப்படுத்திய பிரதமர்..!
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போதும் சரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிரதமர் பதவியேற்ற பிறகும் சரி ஜெயலலிதாவோடு ஒரு நட்புணர்வுடன் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
அந்த வகையில் சென்னை வரும் போதெல்லாம் அல்லது ஜெயலலிதா டெல்லி செல்லும்போதெல்லாம் மோடி ஜெயலலிதாவை சந்தித்து அரசியல் மற்றும் விஷயங்களை ஆலோசனை செய்துள்ளார் இது தனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுவதாக மோடி குறிப்பிட்டுள்ளது அஇஅதிமுக தொண்டர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
முன்னதாக இன்று காலை செல்வி ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து ஜெயலலிதாவின் நினைவுகளை அங்குள்ள ஜெ.தீபா மற்றும் மாதவன் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: 10 பேருக்கு பிரதமர் மோடி விட்ட சவால்..! இந்திய மக்கள் உடல் நலன் மீது இவ்வளவு அக்கறையா..?