×
 

திமுக அமைச்சர்களுடன் அதிமுக கள்ள உறவு..? எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இப்படித்தான்- கே.என்.நேரு ஒரே போடு..!

அது உங்களுடைய கட்சி. நீங்கள் வைத்திருப்பதும் நீக்குவதும் உங்களுடைய செளரியம். ஆனால், நீங்கள் யாரை மாற்றினாலும் திமுகவின் கோட்டையாக திருச்சி இருக்குமே தவிர, எந்த காலத்தில் நீங்கள் வெற்றி பெற முடியாது

''திருச்சி திமுக-வின் கோட்டை.. அதிமுக சார்பில் எந்த மாவட்டச் செயலாளரை நியமித்தாலும் ஒருபோதும் வெற்றி பெற முடியாது''.. எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

 

திருச்சியில் சரியாக பணியாற்றவில்லை என்றால் அதிமுக மாவட்ட செயலாளர்களை மாற்ற  வேண்டி இருக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக ஓட்டுகளை ஒருங்கிணைக்கணும்.. இபிஎஸ் கருத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய சீமான்..!

இதுகுறித்து கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, '' திமுகவின் கோட்டையான திருச்சியில் அதிமுக சார்பில் எந்த மாவட்டச் செயலாளரை நியமித்தாலும் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. எதிர்க்கட்சித் தலைவர், அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி, திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அவருடைய கட்சிக்காரர்களுடன் ஜூம் மீட்டிங்கில் பேசி இருக்கிறார். அப்போது அவர், ஒரு காலத்தில் அவருடைய தலைவி ஜெயலலிதா இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இப்போது அதிமுகவினுடைய தொண்டர்களும், நிர்வாகிகளும் நடந்து கொள்வது சரியில்லை.

உள்ளூர் அமைச்சராக இருக்கக்கூடிய கே.என்.நேருவுடனும், மகேஷ் உடனும் அதிமுக- காரர்கள் உறவாக இருக்கிறார்கள். மேற்கொண்டு அப்படி நீங்கள் உறவாக இருந்தால் உங்களையெல்லாம் நீக்கிவிட்டு புது மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார் எடப்பாடி. பத்திரிகைகளில் வந்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் வந்திருக்கிறது. நான் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது அப்போது திருச்சி மாவட்டத்தில் 17 தொகுதிகள். 17 தொகுதிகளில்கூட அன்றைக்கு கிழக்கு தொகுதியில் திமுகதான் வெற்றி பெற்றது.

மற்ற இடங்களில் பல தோழமைக் கட்சிகள் வெற்றி பெற்றனர். 1980ல் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. அதிமுக தோல்வி அடைந்தது. எம்.ஜி.ஆர் இருக்கின்றபோதே 1984ல் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல், இந்திரா காந்தி இறந்தததால் அந்த அனுதாபத்தில் அவர்கள் இங்கே வெற்றி பெற்றார்கள். 1986ல் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. 1989 இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. 1991 ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அப்போது கூட அவர்கள் திருச்சி மாவட்டத்தில் முழுமையாக வெற்றி பெறவில்லை.

 மீண்டும் 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. எடப்பாடி அவர்களே... திருச்சி அதிமுக கோட்டையாக இருந்தது என்று சொல்லி இருக்கிறீர்கள். கோட்டை என்றால் தளபதி காலத்தில் தான் கோட்டையாக இருக்கிறது என்று இல்லை.  உங்களுடைய கட்சிக்கு திருச்சி எந்த காலத்திலும் கோட்டையாக இருந்ததில்லை. அவர்களுடைய மாவட்டச் செயலாளர்கள் சரியாக இல்லை என்று சொன்னால் அவர்களை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அது உங்களுடைய கட்சி. நீங்கள் வைத்திருப்பதும் நீக்குவதும் உங்களுடைய செளரியம். ஆனால், நீங்கள் யாரை மாற்றினாலும் திமுகவின் கோட்டையாக திருச்சி இருக்குமே தவிர, எந்த காலத்தில் நீங்கள் வெற்றி பெற முடியாது'' என பதிலடி கொடுத்துள்ளார்.
 

இதையும் படிங்க: வார்த்தையை விட்ட தர்மேந்திர பிரதான்.. கொதித்தெழுந்த திமுக எம்.பி.க்கள்.. அனல் பறந்த நாடாளுமன்றம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share