முனிவரே, எடப்பாடியாருக்கு புத்தி சொல்லு... சக்தி வேண்டி அலையும் ஓபிஎஸ்..!
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிகவில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கான புத்தியை எடப்பாடிக்கு புகுட்ட வேண்டும் என கோயில் கோயிலாக சென்று வழிபாடு நடத்தும் சக்தியை தனக்கு சக்தியை பெற்று தருமாறு முனிவரிடமும் வேண்டியிருக்கிறார் ஓபிஎஸ்.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிகவில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கான புத்தியை எடப்பாடிக்கு புகுட்ட வேண்டும் என கோயில் கோயிலாக சென்று வழிபாடு நடத்தும் சக்தியை தனக்கு சக்தியை பெற்று தருமாறு முனிவரிடமும் வேண்டியிருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுகவில், எடப்பாடியிம்,ஓபிஎஸும் பிரிந்து எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும், ஓ.பி.எஸ் விட்டுக் கொடுப்பதாக இல்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஓ.பி.எஸ் மேல் முறையீடு செய்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்திலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரித்துள்ளதை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், தனக்கான இடத்தை நிர்ணயிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியோ தேர்தல் தேர்தலாக தோல்வி, கட்சிக்குள் நடந்து வரும் குழப்பம், கூட்டங்களில் நடக்கும் அடிதடிகள், எதிர்பேச்சுகள் என கடும் சவாலை சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: 2026ல் -கனவு காணும் எடப்பாடியார்..! கருகும் இலை... கூட்டணிக்கு என்ன விலை..?
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி தன் கை ஓங்குவதற்காக கோயில் கோயிலாக ஆன்மிக பயணத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். சூரசம்ஹார ஸ்தலமான திருச்செந்தூரில் தமிழ் கடவுளை வழிபட்ட ஓ.பி.எஸ் அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விஜயாபதி கோவிலுக்கும் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ‘இந்து- முஸ்லீம் மோதல் வேண்டாம்...’அம்பேத்கர் பிரச்சனைக்கு அணை போடுகிறாரா மோகன் பகவத்..?