×
 

ஜனவரி 30-ல் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு... பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு முயற்சி..

ஜனவரி 30 அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் வகையில் வருகிற 30-ந் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதி வருகிற 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி 31-ந் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அவரது உரை மீதான விவாதம் பிப்ரவரி 3,4,6 ஆகிய தேதிகளில் நடைபெறும். முன்னதாக பிப்ரவரி 1-ந் தேதி 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். இதன்மூலம் எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார். 

இந்த பட்ஜெட்டில்  நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட அறிவிப்புகள் வெளியாகும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு இம்முறை உயர்த்தப்படக் கூடும் என்பதும் அவர்களின் கணிப்பாக உள்ளது.

இதையும் படிங்க: Budget 2025: வருமான வரி எப்போது அறிமுகம்? ஆங்கில நாளேட்டின் நிறுவனருக்கும்-பட்ஜெட்டுக்கும் சம்பந்தம் என்ன?

இந்த சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த வருகிற 30-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அழைப்பு விடுத்துள்ளார். புறக்கணிப்பு, வெளிநடப்பு ஆகியவற்றைத் தாண்டி ஆக்கபூர்வமான முறையில் கூட்டத்தொடரை நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் மாதம் 10-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கவலை கொள்ளாத தமிழக அரசு! அதிகரித்துவரும் கடன், வருவாய் பற்றாக்குறை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share