×
 

கடும் எதிர்ப்பு..! ஜஸ்ட் மிஸ்.. தப்பித்த காஷ்யப் பட்டேல்.. முதல் இந்திய வம்சாவளி FBI தலைவர்..!

அமெரிக்காவின் FBI தலைவராக இந்திய வம்சாவளியான கஷ்யப் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க செனட் சபையில் மொத்தம் உள்ள 100 வாக்குகளில் 49 வாக்குகள் கஷ்யப் பட்டேல்க்கு எதிராகவும் 51 வாக்குகள் ஆதரவாகவும் கிடைத்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

வெறும் இரண்டே இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய வம்சாவளியான கஷ்யப் பட்டேல் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த FBI  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!

அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கஷ்யப் பட்டேல்  FBI தலைவராவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, புதிய ஜனாதிபதியான டிரம்ப் காஷ்யப் பட்டேல் பெயரை பரிந்துரைத்ததும் செனட் வாக்கெடுப்பிற்கு விடுவார்கள் அங்கு மொத்தமுள்ள 100 வாக்குகளில் வெறும் 2% வித்தியாசத்தில் காசியப் வெற்றி பெற்றுள்ளார்.

காஷ்யப்க்கு கடுமையான எதிர்ப்பு கிளம்புவதற்கு காரணம் அவரது அதிரடி அணுகுமுறைகள் மற்றும் அவர் அளிக்கும் பேட்டிகள் தான் பதவியேற்றால் அனைத்து நடவடிக்கைகளும் அதிரடியாக இருக்கும், தவறு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது, அதேபோன்று ஏற்கனவே தவறு செய்தவர்களும் தப்ப முடியாது என காஷ்யப் கூறி இருந்ததால், பல முக்கிய தலைவர்களே குறிப்பாக செனட் உறுப்பினர்களே காஷ்யப்பை கண்டு நடுங்கி வந்தனர் என்றே சொல்லலாம்.

காசியப் பட்டேல் பதவியேற்றால் நாங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என பல A கிரேடு அதிகாரிகள் அமெரிக்காவில் கூறி வந்தார்களாம். டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய சகவான காசியப் பட்டேல், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் அவர்களது பெற்றோர் அமெரிக்காவில் குடியேறி நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர் காசிய பட்டேல் ஆவார்.

தொழில் ரீதியாக வழக்கறிஞரான இவர் அரசு தொடர்பான பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டுள்ளார் கடந்த முறை டிரம்ப் ஆட்சியின்போது டிரம்ப் உடனேயே ஒரு செகரட்டரி போல தொடர்ந்து கொண்டே இருந்தவர்தான் காஷ்யப் பட்டேல்,

இவர் பதவி ஏற்றால் பல ஆயிரக்கணக்கான மூத்த அதிகாரிகள் பதவி இழப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் செய்த ஊழல்கள் அனைத்தும் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக, தேர்தல் சமயத்தின் போதே வெளிப்படையாக சொல்லப்பட்டது.

அதுமட்டுமின்றி பல முறைகேடுகள் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கிய சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் காஷ்யப் வலையில் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
அமெரிக்காவில் தொடர்ந்து வெளிநாட்டு சக்திகளால் நிறைவேற்றப்படும் போதை மருந்து கடத்தல்கள்,பாலியல் தொடர்பான முறைகேடுகள் என பல விஷயங்களை காஷ்யப் பட்டேல்  இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவார் என கூறப்படுகிறது.

காசியப் பட்டேலின் பெற்றோர்கள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகிறார்கள் அவரது சகோதரியும் இந்தியாவில் தான் வசித்து வருகிறார் காஷ்யப் பெயரை FBI  தலைவராக டொனால்ட் டிரம்ப் அறிவித்த உடனே நடைபெற்ற செனட் நேர்முக தேர்வின் போது காசியப் தனது பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக கூறி அறிமுகம் செய்து வைத்தார், பின்னர் ஜெய் ஸ்ரீ ராம் என உரக்க கூறினார்.

உள்நாட்டு சதித்திட்டம், தீவிரவாதம்,போதை மருந்து கடத்தல்கள், கூட்டு சதி ஆகிய அனைத்து விஷயங்களையும் காஷ்யப் தலைமையிலான FBI குழுவினரே அமெரிக்கா முழுவதும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்படுகிறது

இதையும் படிங்க: தேர்தல் ஜனநாயகத்துக்கு அமெரிக்கா உதவி: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share