தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் - திருமாவளவன்
காஷ்மீர் தாக்குதல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு இஸ்ரேலிய மற்றும் ஒரு இத்தாலிய குடிமகனும் அடங்குவர். இந்தத் தாக்குதல் கடந்த இருபது ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல். இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் முழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்து, ''காஷ்மீர் தாக்குதல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். உளவுத்துறை தோல்வி அடைந்திருக்கிறது என்பதையே இந்த தாக்குதல் காட்டுகிறது. அங்கு பயங்கரவாதமே இல்லை.. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பா.ஜ.க. அரசின் கூற்றை நம்பிச் சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துரும் பலரும், ''இலங்கை அதிபர் ராஜபட்சே நமது மீனவர்களை கடலில் சுட்டுக் கொல்லும்போது, அதை ஏன் கேட்காமல் போய்விட்டு கை கொடுத்து விருந்து சாப்பிபட்டு வந்த விருந்தினர்தானே நீங்கள்? மரக்காணம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 32 பேர் இறந்தனர். அதற்கு பொறுப்பேற்று ஸ்டாலினை பதவி விலகக் கோரினீர்களா?
பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பயணிகள் பலியாகி விட்டனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அந்த மாநில முதல்வரை பதவி விலகச்சொல்லவில்லை ஏன்? கோவை தீவிரவாத வெடிகுண்டு தாக்குதலை இன்றை வரைக்கும் சிலிண்டர் வெடிப்பு எனச் சொல்லிவிட்டு உருட்டுகிறீர்கள்'' என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'திமுகவை நக்கிப் பிழைக்கிறோமா..?' கூட்டணியில் ஊசலாட்டம்..? கடுப்பாகும் திருமாவளவன்.!