×
 

பாகிஸ்தானுக்கு பதிலடி..! ஜனாதிபதியுடன் அமித்ஷா அவசர சந்திப்பு..!

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கோர தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ARTICLE 142 ஒரு அணு ஆயுதம்..! உச்சநீதிமன்றம் குறித்து துணை ஜனாதிபதி கடும் விமர்சனம்..!

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று சந்தித்துள்ளார். அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், மத்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்தநாள்..! பிரதமர் மோடி, ஜனாதிபதி மரியாதை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share