×
 

அவர் முகத்துல கூட முழிக்கமாட்டேன்... அப்பாவை சந்திக்க மறுக்கும் மகன்; பாமகவில் உச்சக்கட்ட மோதல்!

அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்து பக்கமே கால் வைக்க மாட்டேன் என்றும், ராமதாஸை பார்க்க மாட்டேன் என்றும் அடம்பிடித்து வருகிறாராம்.

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நேற்று முன்தினம் நீக்கி உத்தரவிட்டிருந்தார் நிறுவனர் ராமதாஸ். தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டது முதலே தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் கிடைக்க பெற்றிருக்கின்றன. 

 பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் பொறுப்பிலிருந்து மருத்துவர் அன்புமணி ராமதாசை  நீக்கிவிட்டு செயல் தலைவராக அவரை நியமனம் செய்வதாக நேற்று முன்தினம் ராமதாஸ் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அன்புமணி இனி கட்சியில் செயல் தலைவர்தான், நான்தான் தலைவர் என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாகியும் அந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் ஏற்றப்படாமல் உள்ளது. இந்த பிரச்சனை எழுந்தது முதலே தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே கே மணி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று சந்தித்து ராமதாசை சமாதானப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஆனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை, அது மட்டுமல்லாமல் கருத்து வேறுபாடுகள் எழக்கூடிய போதெல்லாம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று தன்னுடைய தந்தையை அமைதிப்படுத்துவது  அன்புமணியினுடைய வழக்கமான பாணியாக இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த முறை பிரச்சனை ஏற்பட்டு மூன்று நாட்களாகியும் அன்புமணி தன்னுடைய வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. தைலாபுரம் தோட்டத்திற்கு செல்லுவார் என்று பாமகவின் மூத்த நிர்வாகிகள் எதிர்பார்த்த நிலையிலும், அவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சி இருக்கின்றது. அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு மூன்று நாட்களாகியும் இன்னும் செல்லவில்லை. 

இதையும் படிங்க: பாமகவிடம் கையெழுத்து கேட்ட பாஜக… அப்பாவை அடியோடு தூக்கிடணும்… கங்கணம் கட்டிய அன்புமணி..!

அதே நேரம் பாமகவிற்கு நான்தான் தலைவர் என்பதில் அன்புமணி ராமதாஸ் உறுதியாக இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவர் இடையிலும் நீடித்து வரக்கூடிய இந்த யுத்தத்தின் காரணமாக மே 11 ஆம் தேதி நடத்த உள்ள அந்த சித்திரை முழுநிலவு பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை எவ்வாறு குறிப்பிடுவது பாமகவின் தலைவர் என்று குறிப்பிடுவதா அல்லது ராமதாஸ் சொல்லி இருக்கக்கூடிய படி செயல் தலைவர் என்று குறிப்பிடுவதா என்ற குழப்பத்திலேயே சித்திரை முழுநிலவு பெருவிழாவிற்கானபணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

 பல ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு பெருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்துவதற்காக பாமகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில் அந்த பணிகளில் தொய்வு ஏற்படக்கூடிய விதமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அதிகார மோதல் தற்பொழுது காரணமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.  அதே நேரம் தொடர்ந்து ராமதாஸை சமாதானப்படுத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 

சோசியல் மீடியாக்களில் பலரும் அன்புமணிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையிலும், அன்புமணியினுடைய ஆதரவாளர்களான திலகு பாமா உள்ளிட்டவர்களை தைலாபுரம் தோட்டத்திலே சந்திப்பதற்கு ராமதாஸ் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றார். தன்னுடைய ஆதரவாளர்களை மட்டும் ராமதாஸ் சந்தித்து வருகின்றார். அன்புமணியின் ஆதரவாளர்களாக தோட்டத்திற்கு வரக்கூடியவர்களை சந்திப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். எனவே மூத்த தலைவர்கள் பாமகவில் இருக்கக்கூடிய அவர்கள் தலையிட்டு அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

கடந்த முறை பொதுக்குழுவில் ஏற்பட்ட சண்டையின் பொழுது அடுத்த ஒன்று இரண்டு நாட்களுக்குள்ளாக அது பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை ராமதாஸ் சொல்லி இருக்கக்கூடிய அந்த கருத்துகளுக்கு அன்புமணி எந்த பதில்வினை ஆற்றாமல் இருப்பதும், தைலாபுரம் தோட்டத்திற்கும் அவர் செல்லாமல் இருப்பதும் கட்சிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அன்புமணியை தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைப்பதற்கான முயற்சியிலே மூத்த தலைவர்கள் சிலர் ஈடுபட்டிருக்கின்றார்கள் .

இன்னும் ஒன்று இரண்டு நாட்களுக்குள் அந்த பிரச்சனையை முடிவு செய்து அடுத்த கட்டமாக கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டுவதற்கு பாமக தலைமை தயாராக வேண்டும் என்று பாமகவின் நிர்வாகிகள் எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஏனென்றால் அமித்ஷா வருகைக்கு பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுமே கூட்டணி தொடர்பாக தங்களுடைய தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி விட்டார்கள். ஆனால் பாமக இன்னும் இந்த உட்கட்சி குழப்பத்திலிருந்து வெளியில் வர முடியாத சூழலில் இருப்பதால் உடனடியாக இருவரும் தலையிட்டு அமர்ந்து பேசி ஒரு தீர்வு கண்டு வேண்டும் என்றும்,  சித்திரை முழு நிலவு பெருவிழாவிற்கான பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பாமகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: தூக்கியடிக்கப்பட்ட அன்புமணி... ராமதாஸை தூண்டிவிட்டது இவரா? - பாகவினர் ஷாக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share