×
 

பாமக எடுத்த திடீர் முடிவு! - பேரதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்..!

நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்ததிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய நிலையில் இது தொடர்பான விவாதம் வாக்கெடுப்பை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வக்புவாரிய சட்டத்ததிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் வக்புவாரிய சட்டத்ததிருத்தம் தொடர்பான விவாத வாக்கெடுப்பை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்திருக்கிறார். இஸ்லாமிய ஆதரவு என தமிழகத்தில் கூறிவிட்டு வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

நாடாளுமன்றத்தினுடைய இரண்டு அவைகளிலும் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற எம்பிக்கள் அதிமுக உட்பட அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் ஜி.கே வாசன் மட்டும் ஆதரவு தெரிவித்திருக்கின்றார். அதே நேரத்தில் பாமக எம்.பி.யான அன்புமணி ராமதாஸ்  நடுநிலை வகிப்பதாக, அதாவது அவைக்கே செல்லாமல் புறக்கணித்துள்ளார்.  இது தமிழக அரசியலிலும், சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்பு வாரிய மசோதா.. ஆதரவு - 128, எதிர்ப்பு - 95..!

 தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும் டெல்லியில் ஒரு நிலைப்பாடும் எடுப்பதாக அன்புமணி மீது அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பாமகவினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சருடைய தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதாவது வக்பு சட்ட திருத்தம் என்பது தேவையற்றது. தற்போது இஸ்லாமியர்கள் பின்பற்றக்கூடிய சட்டத்தையே தொடரவேண்டும், அதுவே பாகலவின் நிலைப்பாடு எனத் தெரிவிக்கப்பட்டது. 

நேற்றைய தினம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதுகூட, முதலமைச்சர் இதற்கு நீதிமன்றத்திலே வழக்கு தொடுப்பதாக சொல்லி இருக்கிறார். அதற்கு பாமக துணை நிற்கும். இந்த சட்ட திருத்தம் தேவையற்றது எனக்கூறினார். அப்படி இருக்கும்போது டெல்லி வாக்கெடுப்பின் போது அன்புமணி ஏன்  அந்த சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை. தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை எங்கு தெரிவிக்க வேண்டுமோ, அங்குதானே தெரிவித்திருக்க வேண்டும் என்று சமூக வலைதலங்களிலும், அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான வக்பு சட்ட திருத்த மசோதா... விளக்கமளிக்கிறது மத்திய அரசு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share