லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள்... “ஒருவர் அல்ல 4 பேர்”... அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் சில மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.
அண்ணாநகர் துணை கமிஷனர் சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு கடந்த வாரம் முதல் விசாரணை நடத்தி வருகிறது.
சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் மீண்டும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஞானசேகரன் பயன்படுத்திய செல்போன் மற்றும் அவர் பயன்படுத்திய 2 சிம்கார்டுகளை வைத்து, கடந்த 6 மாதங்களாக அவர் பயன்படுத்திய வாட்ஸ் அப் தகவல்கள், வீடியோக்கள், யார் யாரிடம் பேசினார், அதன் முழு விபரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருவதாக, தற்போது தகவல் வெளியாகின.
இதையும் படிங்க: திமுகவிற்கு நெருக்கடி; இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கும் பாஜக மகளிர் அணி!
இதனிடையே, இன்று கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் இல்லத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு பல மணி நேரம் சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்டாப், பட்டா கத்தி ஆகியவற்றை அதிகாரிகள் அட்டை பெட்டிக்குள் வைத்து பத்திரமாக எடுத்துச் சென்றனர். அந்த லேப்டாப்பில் ஒன்றல்ல பல பெண்களுடைய ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டறிந்து அவர்களிடம் இருந்தும் புகார்களைப் பெற சிறப்பு புலனாய்வுக்குழு முயற்சித்து வருகிறது. எக்காரணம் கொண்டும் புகார் அளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும், அதற்கான முழு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உயிரை குடித்த "பிராங்க்" ...சகமாணவர்களால் கதறி அழுத ஆடியோ ..பிறந்த நாளில் கல்லூரி மாணவர் தற்கொலை ..!