×
 

தலைமைக்கு தலைவலியாக மாறிய அண்ணாமலை... பாஜகவுக்கே சவால் விடும் 'மல'-யின் விழுதுகள்...!

பாஜக தலைமை கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், சொந்தக் கட்சிக்கே சவால் விடும் தொனியில் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். 

வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா முயன்று வருகிறார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது எனவும், அதுவும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தினால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் அண்ணாமலை அமித் ஷாவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தால் கூட்டணிக்கு செட் ஆகாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து டெல்லி தலைமை முடிவெடுப்பதற்குள்ளாகவே தமிழகத்தில் அதிமுக - அண்ணாமலை இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கிவிட்டது. நேற்று சிவகங்கையைச் சேர்ந்த அதிமுகவினர், தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, எடப்பாடி யாரை முதல்வராக ஏற்பவர் கள் தான் கூட்டணியில் சேர முடியும் போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை நகரம் முழுவதும் ஒட்டி பரபரப்பைக் கிளப்பியது. உடனே பதிலடி தருகிறோம் என்ற பெரியரில் பரமக்குடி பாஜகவினர் களத்தில் இறங்கினர். 

இதையும் படிங்க: உங்கள் நாடகத்திற்காக சட்டமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்.. திமுகவின் கருப்பு பேட்ஜ் விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்..!

 அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும், அண்ணாமலை மாநில தலைவராக வேண்டும் எனவும் பாஜக சார்பில் பரமக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டப்பட்டன. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக தலைமை முயற்சித்து வரும் நிலையில், அண்ணாமலை ஆதரவாளர்களின் இந்த செயல் அதிமுகவை வெறுப்படைய வைத்துள்ளது. இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், சொந்தக் கட்சிக்கே சவால் விடும் தொனியில் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். 

சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “தமிழ்நாட்டின் அரசியலில் இருந்து அண்ணாமலையை அகற்ற ஆளும் கட்சி, ஆண்ட கட்சி,.... கட்சி மாபெரும் கூட்டணி என்றும், எதிர்கால தமிழக மக்கள், இளைஞர்களின் நலன் கருதி அண்ணாமலையார் பக்கம் நிற்போம்” என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கொரட்டூர், பாடி ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் பெயர் குறிப்பிடாமல் உள்ள கட்சி, பாஜகவை தான் குறிப்பதாகவும், அண்ணாமலை ஆதரவாளர்கள் வேண்டுமென்றே தலைமைக்கு சவால் விடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இதையும் படிங்க: மீண்டும் டெல்லி செல்லும் அண்ணாமலை... கசிந்தது பரபர காரணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share