விடுதலைப் புலிகள் உட்பட 67 அமைப்புகளுக்கு தடை..! பயங்கரவாத அமைப்புகள் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு..!
விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கூறி மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள ஏதுவாக, இந்தப் பட்டியலை மத்திய அரசு அடிக்கடி திருத்தியமைப்பது வழக்கம். அதன்படி விடுதலை புலிகள் உட்பட 67 அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 100 நாட்கள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.. மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை..!
அதில், உபா சட்டத்தின் கீழ் 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பாபர் கால்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, ஹர்கத் உல் முஹாஜூதின், அல் உம்ர் முஹாஜூதின், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, சிமி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப் படை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)- மக்கள் போர்,சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி உட்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மக்கள் விடுதலை ராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உட்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும், எந்த விதமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தாத வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. தற்போது திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது..
இதையும் படிங்க: தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மத்திய அரசை வாட்டி எடுத்த ஸ்டாலின்!!