பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்ட காட்சிகள்... உலகையே அதிர வைக்கும் வீடியோ
வீடியோ எடுத்தவரின் கண்களுக்கு முன்பாக நடந்த சோகம் அவருக்குத் தெரியாது அப்போது தெரியாது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் தீவிரவாதியால் மக்களை துப்பாக்கியால் சுடும் வீடியோ வெளியாகி உலகத்தையே அதிர வைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துள்ள பதற்றம் போராக மாறக்கூடும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது. கடந்த வாரம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆசிஃப், "எங்கள் படைகளை பலப்படுத்தி உள்ளோம். ஏனெனில் அது இப்போது அவசியமாகிவிட்டது. இந்நிலையில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நமது இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நாடும்'' என்று பாகிஸ்தான் அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: உயிரை உலுக்கும் பயம்... POJK முகாம் பயங்கரவாதிகளை திரும்ப அழைக்கும் பாகிஸ்தான்..!
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இது இந்தியாவில் சீற்றத்தைத் தூண்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாகவும், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் தான் நடத்தியதாகவும் இந்தியா குற்றம் சாட்டுகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து ஏப்ரல் 23 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, ஏப்ரல் 24 அன்று பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடனான பிற இருதரப்பு ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்தியது. பாகிஸ்தான் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்தது. இந்திய விமான நிறுவனங்களுக்கு அதன் வான்வெளியை மூடியது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தனக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை மறுக்க எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் பஹல்காம் பள்ளத்தாக்கில் துப்பாக்கி சூடு நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவர் அந்த பள்ளத்தாக்கில் ரோப்காரில் புறப்படும்போது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதும், ரோப்வே ஆபரேட்டர் ‘அல்லாஹு ஹூ அக்பர்’ என்று கோஷமிட்டார்.
WATCH - Entire World in SHOCK!!
— Times Algebra (@TimesAlgebraIND) April 28, 2025
Your Opinion ?pic.twitter.com/E6EVTL7syV
அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் அதை அறியாமல் பதிவு செய்தார். அவர் ரோப் காரில் செல்லும்போது மக்கள் பதறியடித்து ஓடுவதும், துபாக்கியால் சுடப்பட்ட ஒருவர் தரையில் சுருண்டு வீழ்வதுமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வீடியோ எடுத்தவரின் கண்களுக்கு முன்பாக நடந்த சோகம் அவருக்குத் தெரியாது அப்போது தெரியாது.
இதையும் படிங்க: 6 நாட்களாகியும் சவால்..! பஹல்காம் பயங்கரவாதிகளின் தடயத்தைக்கூட சேகரிக்காத இந்தியா..!