×
 

தீவிரவாதிகள் எப்படி எல்லை தாண்டினார்கள் ? அசாதுதின் ஒவைசி சந்தேகம்...

தீவிரவாதிகள் எப்படி எல்லைக்குள் நுழைந்தார்கள் என அசாதுதின் ஓவைசி கேள்வி எழுப்பினார்.

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஏ.ஐ ஆம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பினார். இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் இருந்த இடத்தில், ஒரு போலீஸ்காரரோ அல்லது CRPF முகாமோ ஏன் இல்லாமல் போனது என கேள்வி எழுப்பினார். விரைவு எதிர்வினைக் குழு அந்த இடத்தை அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது என்றும் மக்களின் மத நம்பிக்கையைப் பற்றி கேட்ட பிறகு சுட்டுக் கொன்றதாகவும் கூறியுள்ளார். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளனர் , பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது இவையெல்லாம் சரி., அவர்கள் எப்படி எல்லையைத் தாண்டினார்கள்? அதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார்.

அவர்கள் பஹல்காமை அடைந்தால் ஸ்ரீநகரையும் அடைய முடியும் என்றும் பொறுப்புக்கூறல் நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே நீதி வெல்லும் எனவும் பயங்கரவாதத் தாக்குதலை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீண்டிய பாக்.! ஏவுகணை சோதனையில் அரக்கனை இறக்கிய இந்தியா...!

இதையும் படிங்க: இந்தியாவின் பதிலடி.. ஐசோலேஷனில் பாகிஸ்தான்.. எச்சரிக்கும் வல்லுநர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share