×
 

காங்கிரஸ் எம்.பி., மனைவிக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு… அசாமில் எஃப்.ஐ.ஆர் பதிவு..!

எலிசபெத் கோல்போர்ன் 12 ஆண்டுகளாக இந்திய குடியுரிமை பெற மறுத்து வருகிறார். இது தவிர, ஒரு பிரிட்டிஷ் குடிமகளை மணந்த கௌரவ் கோகோய் நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பி வருகிறார்

கௌரவ் கோகோயின் மனைவியின் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ நண்பர் என்று கூறப்படும் நபர் மீது அசாம் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி., கோகோயின் மனைவி எலிசபெத் கோல்போர்ன், முன்பு பாகிஸ்தான் திட்டக் குழுவின் ஆலோசகரான அலி தௌகீர் ஷேக்கின் கீழ் இஸ்லாமாபாத்தில் ஐஎஸ்ஐ உடன் பணிபுரிந்தார் என்கிற குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது.

பாஜக, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஐஎஸ்ஐ உடன்  கோகோயின் மனைவி எலிசபெத் கோல்போர்னுக்கு  தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை, சர்மா தனது நிலைப்பாட்டை மென்மையாக்கி, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படலாம் என்று கூறினார். அதே நேரத்தில், கௌரவ் கோகோய் இந்த விஷயத்தில் சட்ட உதவியை நாடுவதாகக் கூறினார். பாகிஸ்தான் அதிகாரி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய அசாம் அரசு மாநில அரசைக் கேட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பெண்கள்தான் என் பலவீனம்..'! கேடு கெட்ட நட்பு… மும்பை குண்டு வெடிப்பில் ராணா சிக்கியது எப்படி..?

பாகிஸ்தான் திட்டக் குழுவின் ஆலோசகரான அலி தௌகீர் ஷேக், மாநில விவகாரங்களில் தலையிட முயன்றதாகக் கூறப்படுகிறது. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத்தின் பாகிஸ்தான் தொடர்பைக் கண்டறிய வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அசாம் முதல்வர் ஏற்கனவே கூறியிருந்தார். எலிசபெத் ஒரு பிரிட்டிஷ் குடிமகள். இந்நிலையில்  அஸ்ஸாம் அமைச்சரவை எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மீது அசாம் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில்,பாகிஸ்தான் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், காலநிலை மாற்றம் குறித்து செயல்படும் ஒரு அரசு சாரா நிறுவனத்தையும் அவர் நடத்தி வருவதாக  அலி தௌகீர் ஷேக்கைப் பற்றி அறியப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்த காலத்தில், அலி தௌகீர்  ஷேக்கின் இந்த 'லீட் பாகிஸ்தான்' என்ற அரசு சாரா அமைப்பில் எலிசபெத் கோல்போர்ன் பணியாற்றி வந்ததாக சர்மா கூறினார்.

பாகிஸ்தான் அதிகாரி அலி தௌகீர் ஷேக்கும், சமூக ஊடகங்கள் மூலம் இந்தியாவில் அமைதியைக் குலைக்க முயன்றதாக சர்மா கூறினார். சமீபத்திய செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் அசாமின் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் விஷயங்களை அலி தௌகீர் ஷேக் பேசியுள்ளதாக சர்மா குற்றம் சாட்டினார். இந்தியாவின் உள் விவகாரங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து ஷேக் சமூக ஊடகங்களில் பேசும் விதம் ஷேக்கின் தீய நோக்கங்களை வெளிப்படுத்துகிறது என்று முதல்வர் சர்மா கூறினார்.

பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “அசாம் முதல்வர் எனது சகா கௌரவ் கோகோய் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். இப்படி ஒருவரின் குணத்தை படுகொலை செய்வது மிகவும் மோசமான விஷயம். இதற்காக, நாம் சட்டத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும். 2024 ஆம் ஆண்டு ஜோர்ஹாட் தொகுதியில் முதல்வர் சர்மா மற்றும் பிற அமைச்சர்களை வெற்றி பெறச் செய்ய கௌரவ் கோகோய் நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். இதையும் மீறி, கௌரவ் கோகோய் இந்த இடத்தை வென்றார். இது தவிர, கௌரவ் கோகோய் அசாமில் ஊழலை அம்பலப்படுத்தினார் இந்தக் கோபத்தால் சர்மா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்'' என ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்போர்னுக்கு ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாக சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.இது தவிர, அவர் இளைஞர்களை மூளைச்சலவை செய்வதற்காக பாகிஸ்தான் தூதரகத்திற்கு அழைத்துச் செல்கிறார் எனவும் குற்றசாட்டியுள்ள நிலையில், அவரது நண்பர் அலி தௌகீர் ஷேக் மீது அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எலிசபெத் கோல்போர்ன் 12 ஆண்டுகளாக இந்திய குடியுரிமை பெற மறுத்து வருகிறார். இது தவிர, ஒரு பிரிட்டிஷ் குடிமகளை மணந்த கௌரவ் கோகோய் நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பி வருகிறார்

இதையும் படிங்க: சதித் திட்டத்திற்கு இந்திய ராணுவத்தின் பதிலடி : 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share