அயோத்தி ராமஜன்பூமி தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மரணம்
சிறுவயதிலிருந்தே அயோத்தியில் வசித்து வந்தார். தாஸ் ராம்லாலா கோயிலுடன் சுமார் 33 ஆண்டுகள் தொடர்புடையவர்.
அயோத்தி, ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் இன்று லக்னோவில் உள்ள எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் காலமானார். காலை 8 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவர் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அதன் பிறகு அவர் லக்னோவின் எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாதத் தாக்குதல் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவரது நிலைமை மோசமாகவே இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 4 ஆம் தேதி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆச்சார்யா சத்யேந்திர தாஸின் நலம் குறித்து விசாரிக்க எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனைக்கு சென்றார். ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், பிப்ரவரி 2 ஆம் தேதி பக்கவாதம் காரணமாக முதலில் அயோத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மருத்துவர்கள் அவரை எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
ராம ஜென்மபூமியின் தலைமைப் பூசாரியாக ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் இருந்தார். அவர் சிறுவயதிலிருந்தே அயோத்தியில் வசித்து வந்தார். தாஸ் ராம்லாலா கோயிலுடன் சுமார் 33 ஆண்டுகள் தொடர்புடையவர்.
இதையும் படிங்க: ‘மோகன் பாகவத் பேச்சு முட்டாள்தனம், வெளியேறவிடமாட்டோம்’: ஆர்எஸ்எஸ் தலைவருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
ராம் மந்திரின் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு இருந்தே ராமர் கோயிலில் பூசாரியாக வழிபட்டு வந்தார். ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் 1975 ஆம் ஆண்டு சமஸ்கிருத வித்யாலயாவில் ஆச்சார்யா பட்டத்தை பெற்றார்.இதன் பிறகு, 1976-ல், அயோத்தி சமஸ்கிருதக் கல்லூரியின் இலக்கணத் துறையில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட பிறகு, மார்ச் 5, 1992 அன்று, பூசாரியாக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில், அவருக்கு மாத ஊதியமாக ரூ.100 மட்டுமே கிடைத்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக, அது அதிகரிக்கத் தொடங்கியது. 2023 வரை, அவருக்கு மாதந்தோறும் 12 ஆயிரம் கௌரவ ஊதியம் மட்டுமே கிடைத்தது. ஆனால் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டைக்குப் பிறகு, அவரது சம்பளம் ரூ.38500 ஆக அதிகரித்தது.
இதையும் படிங்க: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு... விருதுநகரில் முடிவில்லாமல் தொடரும் சோகம்...!