×
 

திடீரென வெடித்து சிதறல்.. சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் காயம்.. மூட்டையில் பதுக்கி இருந்த மர்ம பொருள்..?

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பட்டாசு பார்சலை லாரியில் இருந்து இறக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாசு என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் தொற்றிக்கொள்வது வாடிக்கை தான். லட்சுமி வெடி, குருவி வெடி முதல் பயங்கர சப்தத்துடன் வெடிக்கும் அனைத்து வெடிகளையும் சிறுவர்கள் ஆர்வமுடன் வெடித்து தள்ளுவர். அதிலும் புஸ்வானம், சங்கு சக்கரம், சாட்டை போன்ற சப்தமில்லாம், வண்ணங்களை வாரி இறைக்கும் பட்டாசுகளை சிறுவர்களை கவர்வது உண்டு. வருடா வருடம் தீபாவளி அன்று மக்கள் பட்டாசு வெடித்து மகிந்திருக்க, சிவகாசி போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஆண்டு தோறும் வெடி மருந்தில் புழங்கி வருகின்றனர்.

எளிதில் தீப்பற்றி எரியும் என்பதாலும் வெடிக்கும் போது பக்கத்திலிருப்பவர்களை சேதப்படுத்தும் என்பதாலும் பட்டாசு ஆலை நடத்துபவர்கள் உரிய அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என போலீசாரும் அரசாங்கமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் இடையில் தூரங்களும் கணக்கிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். பாட்டாசு தயாரிக்கு இடங்களில் 4 புறங்களிலும் தப்பித்து ஓட வசதியாக திறந்த வெளி கதவுகள் அமைக்கபப்ட்டிருக்கும். இத்தனை ஏற்பாட்டோடு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலும், அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் நடக்கும் தீ விபத்தை தவிர்க்க முடிவது இல்லை.

இதையும் படிங்க: எமனாக மாறிய இ - பைக்.. பேட்டரி வெடித்து பெண் பரிதாப பலி..!

ஆண்டுக்கு சிலராவது பட்டாசு ஆலையில் ஏற்படும் தீ விபத்தில் உயிர் இழப்பது தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. அதனால் அனைத்து பகுதிகளிலும் பட்டாசுதயாரிக்கும் போது சரி, அதை மற்றொரு இடத்திற்கு மாற்றும் போதும் சரி உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற்ப்படும். இந்நிலையில் எந்த வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படாமல் ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடா பகுதியில் சிலர் வெங்காய வெடிகளை பார்சலில் அனுப்பியதால் அவை வெடித்து சிதறி 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அரக்கேறி உள்ளது.

ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் பாலாஜி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திறகு ஐதராபாத்தில் இருந்து 4 மூட்டை பார்சல்கள் அனுப்பப்பட்டு இருந்தன. லாரியில் கொண்டு வரப்பட்ட பார்சல்களை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறங்கி கொண்டு இருந்தனர். ஐதராபாத் பார்சலை தொழிலாளி இறக்கி தரையில் போட்டதும் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பார்சல் இறக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

அவர்கள் உடனடியாக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். ஐதராபாத்தில் இருந்து அனுப்பப்பட்ட பார்சல்களில் வெங்காய வெடிகள் இருந்துள்ளன. பார்சலை கையாண்டவர்கள், வெடிகள் இருப்பது தெரியாமல், மற்ற பார்சல்களை போல், அதேச்சையாக இறக்கி தரையில் போட்டபோது உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறியுள்ளது. எனவே அனுமதி இல்லாமல் டிரான்ஸ்போர்ட்டில் புக்கிங் செய்து வெடிகளை அனுப்பியவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எங்கு திரும்பினாலும் அலறல் சத்தம்.. அடுத்தடுத்து மோதிக்கொண்ட ஆம்னி பேருந்துகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share