×
 

உலக தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக பாலகிருஷ்ணன் நியமனம்..!

உலக தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஓய்வுபெற்ற ஐ. ஏ.எஸ்.அதிகாரி பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும் எனவும் பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞர் மற்றும் ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தென்னிந்தியாவுக்கு இழப்பு.... முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவிலிருந்து ஆதரவுக் குரல்.!

தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஆட்சிப் பணியில் 1984-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share