பாகிஸ்தான் -சீனாவால் ஏற்பட்ட அந்த திமிர் எங்கே..? இந்தியாவின் கால்பிடிக்க இறங்கி வந்த வங்கதேசம்..!
பாகிஸ்தான்-சீனாவுடன் கூட்டுச் சேர முயற்சித்த பிறகு இந்தியா-வங்காளதேச உறவுகள் மோசமடைந்து உள்ளன. ஆனால், இப்போது முகமது யூனுஸ் மெதுவாக மீண்டும் பாதைக்குத் திரும்பி வருகிறார். வங்கதேசத்தின் தொனி மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவுடனான, வங்கதேசத்தின் பகைமை இப்போது பஸ்மாகி விட்டது. வங்கதேசம், இப்போது இந்தியாவின் கால்களைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. வங்கதேசம் இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் முகமது யூனுஸ்- பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு வங்காளதேசம், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த வங்கதேசம், தனது ஆணவத்தை முற்றிலுமாக இழந்துவிட்டது.
வங்கதேசத்தின் முகமது யூனுஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். பிம்ஸ்டெக் உச்சிமாநாடு ஏப்ரல் 2-4 வரை பாங்காக்கில் நடைபெறும். அப்போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துமாறு வங்கதேசம், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும், இதற்கு இந்தியா இன்னும் எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை. இதற்கு முன்பே, பிரதமர் மோடிக்கும், முகமது யூனுஸுக்கும் இடையிலான சந்திப்புக்கான விருப்பத்தை வங்காளதேச அரசு வெளிப்படுத்தி இருந்தது. ஆனால், இந்தியா அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவின் 124 வங்கி கணக்குகள் முடக்கம்..! சொத்துக்கள் பறிமுதல்.. நீதிமன்றம் அதிரடி..!
பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக மார்ச் -28 ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, முகமது யூனுஸ் சந்திக்க வாய்ப்புள்ளது. வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான யூனுஸ், சீனா, பாகிஸ்தான் பாக்கம் அதிகமாக சாய்ந்து கொண்டிருப்பதால், இப்போது நடக்கப்போகும் சந்திப்பை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்கும்.
இதுகுறித்துப் பேசிய வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தௌஹீத் ஹுசைன், ''பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக இந்தியாவுடன் இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாத தொடக்கத்தில், ஓமானில் நடந்த இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தௌஹீதை சந்தித்தார். கூட்டத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி பிம்ஸ்டெக் குறித்து பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தியதாக ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் முகமது தௌஹித் உசேனை சந்தித்ததாக ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை நமது இருதரப்பு உறவுகள், பிம்ஸ்டெக் உச்சி மாநாடு குறித்து கவனம் செலுத்தியதாக அவர் கூறினார். இரு தரப்பினரும் பரஸ்பர கவலைகள், நலன்கள் கொண்ட பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இந்தியா மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், இப்போது அவரது ஆணவம் இந்தியாவின் முன் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. யூனுஸின் தொனி இப்போது மாறிவிட்டது. ஷேக் ஹசீனா தொடர்பாக இந்தியா மீது அவர் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால், இப்போது அவர் இந்தியா முன் மன்றாடுவதாகத் தெரிகிறது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை, பாகிஸ்தான்-சீனாவுடன் கூட்டுச் சேர முயற்சித்த பிறகு இந்தியா-வங்காளதேச உறவுகள் மோசமடைந்து உள்ளன. ஆனால், இப்போது முகமது யூனுஸ் மெதுவாக மீண்டும் பாதைக்குத் திரும்பி வருகிறார். வங்கதேசத்தின் தொனி மாறிக்கொண்டே இருக்கிறது.
சமீபத்தில், ஷேக் ஹசீனாவின் கட்சி குறித்து முகமது யூனுஸ் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அவாமி லீக்கை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறியிருந்தார். அவாமி லீக்கை தடை செய்யும் திட்டம் இடைக்கால அரசிடம் இல்லை. ஆனால், கொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட அதன் தலைமையில் உள்ளவர்கள் மீது வங்காளதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்படும் என்றும் வங்காளதேச தலைமை ஆலோசகர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக மும்முனைத் தாக்குதல்: பாகிஸ்தான்- வங்கதேசத்துடன் சேர்ந்து அடித்து ஆடும் சீனா..!