ஷேக் ஹசினாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ்.. இன்டர்போலிடம் வங்கதேச போலீசார் கோரிக்கை..!
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா உள்பட 12 பேருக்கு எதிராக ரெட் கார்டனர் நோட்டீஸை இன்டர்போலிடம் வழங்கியுள்ளது வங்கதேச போலீஸாரின் தேசிய புலனாய்வு முகமை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பம், உள்நாட்டு கலவரம், மாணவர்கல் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசினா அரசு கவிழ்கப்பட்டது அங்கிருந்து ஷேக் ஹசினா தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இந்தியாவில்தான் ஹசினா தங்கியுள்ளார். இந்தியாவில் ஷேக் ஹசினா தங்கியிருப்பது தெரிந்தும் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வங்கதேச தேசிய புலனாய்வு முகமை வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி வங்கதேசத்தில் 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. முன்னாள் பிரதமர் ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது வங்கதேச வரலாற்றில் இதுதான் முதல்முறை.
இதையும் படிங்க: அல்லாவின் ஆணை..! நான் உயிருடன் இருக்கிறேன், வருகிறேன்..! யூனுஸுக்கு ஷேக் ஹசீனா சவால்..!
வங்கதேச தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம், விசாரணை அமைப்புகளின் கோரிக்கையையடுத்து, இந்த ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸை வங்கதேச போலீஸ் துணை டிஜிபி இனமுல் ஹக் சாகர் வழங்கியுள்ளார்.
போலீஸ் துணை டிஜிபி இனமுல் ஹக் சாகர் தலைமை அலுவலகத்தில் அளித்த பேட்டியில் “ஷேக் ஹசினாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி இன்டர்போலிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கும் பட்சத்தில் ஷேக் ஹசினா தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்து அறிவிக்கவும், கைது செய்யவும், நாடுகடத்தல் கோரிக்கை நிலுவையில் இருந்தால் அதைநிறைவேற்றவும் உதவ வேண்டும். அந்த வகையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஷேக் ஹசினாவின் நிலை இனிமேல் என்ன ஆகும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
இந்தியாவில்தான் ஷேக் ஹசினா தஞ்சமடைந்துள்ளார் என்று இன்டர்போல் உறுதி செய்தால், அது குறித்த தகவல்களை வங்கதேசஅதிகாரிகளிடம் தெரிவிக்கும். வங்கதேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசுக்கு தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவி ஏற்ற சில வாரங்களில் வங்கதேச சர்வதேச குற்ற தீர்ப்பாயம் மூலம் ஷேக் ஹசினாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தார்.
ஷேக் ஹசினா மட்டுமல்ல, அவரின் ஆலோசகர்கள், ராணுவ அதிகாரிகள், உதவியாளர்கள் என 12 பேருக்கு எதிராக இனஅழிப்பு மற்றும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றத்தின் கீழ் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஷேக் ஹசினாவை வங்கதேசத்துக்கு கொண்டுவர தொடர்ந்து தீவிரமாக முயற்சிப்போம் என்று இடைக்கால அரசு தெரிவித்திருந்தது. ஒருவேளை இந்தியா ஒத்துழைப்பு அளிக்காமல் ஷேக் ஹசினாவை அனுப்ப மறுத்தால், சர்வதேச தலையீட்டை கோருவோம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல்வருக்கு போட்டியாக துணை வேந்தர்கள் மாநாடு! ஆளுநர் மாளிகை கொடுத்த விளக்கம்...