வங்கதேசத்தில் பேரழகிகளுக்கு ஆபத்து... வளைத்து வளைத்து வேட்டையாடும் போலீஸ்..!
துப்பறியும் பிரிவு போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவரை தங்களுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் வங்கதேசத்தில் அரசை விமர்சிப்பது பெரும் குற்றம். பிரபல நடிகையாக இருந்தாலும் சரி, அழகுப் போட்டியில் வென்ற அழகிகளாக இருந்தாலும் சரி. அரசிற்கோ அல்லது இராணுவத் தலைமைக்கோ எதிராக சமூக ஊடகங்களில் பேசினால் அடுத்து நேரடியாக சிறை செல்ல வேண்டும்.
நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து கிடைக்கும் செய்திகள் அச்சுறுத்துகின்றன. வங்கதேசத்தில் ஜனநாயகக் குரல்கள் எவப்படி அடக்கப்படுகின்றன என்பதையும் காட்டுகிறது. சமீப காலமாக, நாட்டின் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸின் காவல்துறை பல முக்கிய பிரமுகர்களைக் கைது செய்துள்ளது.
வங்கதேசத்தின் 'மிஸ் எர்த் 2020' பட்டம் வென்ற மேக்னா ஆலமுக்கு டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் செஃபாத்துல்லா வியாழக்கிழமை 30 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தார். விசாரணையின்றி ஒருவரைக் காவலில் வைக்கும் உரிமையை அரசுக்கு வழங்கும் சிறப்பு அதிகாரச் சட்டம், 1974-ன் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அல்லாவின் ஆணை..! நான் உயிருடன் இருக்கிறேன், வருகிறேன்..! யூனுஸுக்கு ஷேக் ஹசீனா சவால்..!
மேக்னா ஃபேஸ்புக் நேரலையில் இருந்தபோது கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், துப்பறியும் பிரிவு போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவரை தங்களுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பிரபல நடிகை சோஹானா சபாவையும் டிபி போலீசார் விசாரித்துள்ளனர். இருப்பினும், அவர் மீது என்ன மாதிரியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், நடிகையும், இயக்குநருமான மெஹர் அஃப்ரோஸ் ஷான் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது வீடு தாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை ஷான் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
வங்கதேசத்தில் நடந்த இந்த சம்பவங்களுக்கான பின்னணி அரசியல் கொந்தளிப்புடன் தொடர்புடையது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, நாட்டில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போதைய இடைக்கால அரசு எதிர்க்கும் குரல்களை அடக்குவதற்கு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசை விமர்சிப்பவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். பல கலைஞர்கள், ஆர்வலர்கள், குடிமக்கள் தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசை விமர்சிப்பது இப்போது ஒரு குற்றமாகிவிட்டது. இது சிவில் உரிமைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் பெருமை பீற்றிய யூனுஸ்… மரண இடியை இறக்கிய இந்தியா..!