அலைபாயுதே ஸ்டைலில் திருமணம்.. காதல் மன்னனாக சுற்றிய மாப்பிள்ளை.. கழுத்தை அறுத்துக்கொன்ற மாமியார்..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, திருமணத்திற்கு பிறகும் பிற பெண்களுடன் உறவாடி மகிழ்ந்த கணவனை, தாய் உதவியுடன் மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் லோக்நாத் சிங். வயது 37. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதோடு நிதி மேலாண்மை குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் லோக்நாத் சிங்கிற்கு கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வரும் 21 வயதே ஆன யஷஸ்வினியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக உருவெடுத்தது. யஷஸ்வினியை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்று இனிக்க இனிக்க காதல் செய்துள்ளார் லோக்நாத் சிங். இதனிடையே யஷஸ்வினி தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய நிலையில், அவரது வீட்டிற்கும் பெண்கேட்டு சென்றுள்ளார்.
ஆனால் யஷஸ்வினி - லோக்நாத் திருமணத்திற்கு யஷஸ்வினிவினியின் தாய் ஹேமா பாய் மறுப்பு தெரிவித்தார். காரணம் ஹேமா பாயின் வயது 37. தன்னுடைய வயதுடைய ஒரு மாப்பிள்ளையை எப்படி தனது பெண்ணுக்கு கணவனாக தேர்ந்தெடுப்பது என்று ஹேமாபாய் இவர்களது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் காதல் ஜோடி கண்களுக்கு அது தெரியவில்லை. சிறுது நாளில் யஷஸ்வினி - லோக்நாத் சிங் ஜோடி டிசம்பர் 2024 இல் குனிகலில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணமும் செய்து கொண்டனர். அலைபாயுதே பட பாணியில் யஷஸ்வினி அம்மாவுடனே தங்கி கல்லூரிக்கு போய் வந்தார்.
இதையும் படிங்க: 'கோடி'கள் கேட்டு கர்நாடக அரசை மிரட்டும் எம்எல்ஏக்கள்.. துணை முதல்வர் சிவகுமார் அதிர்ச்சி தகவல்..!
திருமணம் முடிந்தாயிற்று. ஆனால் மனைவி உடன் இல்லை. கேட்பார் இல்லை என்ற கணக்கில் லோக்நாத் சுற்றித்திரிந்துள்ளார். பல பெண்களுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். வரவு செலவு கணக்குகளிலும் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கணவன் பிற பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த யஷஸ்வினி, தனது தாயிடன் நடந்ததை கூறி அழுதுள்ளார். ஆரம்பத்தில் மகளை திட்டித்தீர்த்த ஹேமா பாய், தனது மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என புலம்பி உள்ளார். பின்னர் ஒரு சதித்திட்டத்தை அரங்கேற்றி அதன்படி மகளை நடக்க கட்டளை இட்டுள்ளார்.
அம்மாவின் யோசனைப்படி, யஷஸ்வினி தனது கணவர் லோக்நாத் சிங்கை லாங் டிரைவ் ஒன்றுக்கு அழைத்துள்ளார். பேசியபடியே காரில் போய் வரும் என சிக்கபனாவராவுக்கு அழைத்து சென்றுள்ளார். பாதி வழியில் காரை நிறுத்தி, அவருக்காக சமைத்து கொண்டு வந்ததாக கூறி உணவு ஒன்றையும் தனது கையால் ஊட்டி விட்டுள்ளார்.
அதை சாப்பிட்டதும் அதில் கலந்திருந்த தூக்க மாத்திரையால் கணவர் லோக்நாத் சிங் மயக்கமாகி உள்ளார். அந்த சமயத்தில் காரை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த ஹேமாபாய், தான் கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் மயங்கி கிடந்த லோக்நாத் சிங்கை கழுத்தறுத்து கொன்றார். உடலை காரிலேயே விட்டுச்சென்று, ஆட்டோவில் தாய், மகள் இருவரும் தப்பித்தனர்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி அங்கு விரைந்த போலீசார் லோக்நாத் சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ரியல் எஸ்டேட் தொழில் என்பதால் முன்பகையால் யாராவது கொன்று இருக்கலாம் என நினைத்த போலீசார், அவரது கால் ஹிஸ்ட்ரியை சோதித்தனர்.
யஷஸ்வினியுடன் கடைசியாக இங்கு வந்தது போன் ரெக்கார்டில் தெரிந்தது. யஷஸ்வினியை அழைத்து தங்களது பாணியில் போலீசார் விசாரிக்க அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த யஷஸ்வினி, கொலை செய்த தாய் ஹேமா பாய் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தலைமுடிக்கு இத்தனை மவுசா? ரூ.1 கோடி மதிப்பிலான தலைமுடி திருட்டு.. கதறி துடிக்கும் உரிமையாளர்..!