அமெரிக்காவில் திடுட்டுத்தனமாக குடியேறினால் சரி... பஞ்சாபில் விமானம் வந்திறங்கினால் தவறா..? பஞ்சாப் முதல்வருக்கு பாஜக பதிலடி..!
அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய குடியேறிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானத்தை அமிர்தசரஸில் தரையிறக்குவதற்கான அடிப்படை என்ன? என்று முதலமைச்சர் பகவந்த் மான் வெளியுறவு அமைச்சகத்திடம் கேட்டார்.
அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களை அமிர்தசரஸில் தரையிறக்க முடிவு செய்தது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடும் ஆட்சேபனைகளை தெரிவித்து இருந்தார். இது குறித்து பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தையே அவதூறு செய்கிறார்கள் என்று பதிலடி கொடுத்தது. பாஜகவுடன் சேர்ந்து, பஞ்சாபில் உள்ள வேறு சில எதிர்க்கட்சித் தலைவர்களும் பகவந்த் மானின் பேச்சைக் கண்டித்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய குடியேறிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானத்தை அமிர்தசரஸில் தரையிறக்குவதற்கான அடிப்படை என்ன? என்று முதலமைச்சர் பகவந்த் மான் வெளியுறவு அமைச்சகத்திடம் கேட்டார்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பகவந்த் மான் பேசுகையில், ''பஞ்சாபை அவதூறு செய்ய நீங்கள் ஏன் அமிர்தசரஸைத் தேர்வு செய்கிறீர்கள்? அமெரிக்க அதிகாரிகள் நம் மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதுதான்ன் டிரம்ப் கொடுத்த பரிசா? என பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் இந்த கேள்வி எழுப்பினார் பகவந்த் மான். அவரின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் இதுகுறித்து, ''அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் நாட்டின் பாதுகாப்பைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. அவர்கள் அரசியல் மட்டுமே செய்கிறார்கள். பஞ்சாப் இளைஞர்களை எங்கிருந்தோ வந்த 'டிராவல் ஏஜென்டுகள்' கொள்ளையடிக்கிறார்கள்' என பாஜக எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா எச்சரித்துள்ளார். ''அவர்கள் தங்கள் நிலத்தை விற்று அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஏஜெண்டுகள் சட்டவிரோதமான வழிகளில் அவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்'' என்று சிர்சா விமரிசித்துள்ளார். பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசையும், மாநில காவல்துறையையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: மாப்பு..! வெச்சிட்டாண்டா ஆப்பு..! பஞ்சாபிலும் கலகலக்கும் ஆம் ஆத்மி கட்சி
பாஜகவின் மற்றொரு தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், ''முதலமைச்சர் பகவந்த் மானுக்கு கேள்விகள் கேட்க உரிமை இல்லை. ஆனால் அவர் இன்று பதிலளிக்க வேண்டும். பஞ்சாப் இளைஞர்கள் ஏன் மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை பகவத் மான் விளக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்ததாலா? பஞ்சாப் இளைஞர்களைக் கொள்ளையடிக்கும் மோசடி ஏஜெண்டுகளை ஒடுக்க பகவந்த் மான் என்ன செய்தார்.? தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி, பிரச்சினையை பரபரப்பாக்குவதற்குப் பதிலாக, பஞ்சாப் முதல்வர் மாநிலத்தின் கௌரவத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: எரிந்து சாம்பலான கூடாரங்கள்..!