×
 

பட்ஜெட்டில் பெரிய அறிவிப்பு! ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை ஊதியமா?

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை ஊதியம் பெறுவோர், வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த தயாரிப்பு பணிகள், ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் வருமானவரி விதிப்பில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வருமானவரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் உச்ச வரம்பை உயர்த்துவது குறித்து இந்த முறை அறிவிப்பு வெளியாகலாம் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கன்றன என்று என்டிடிவி செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் நிலையில் மக்களின் செலவு செய்யும் அளவும் குறைந்து வருகிறது, பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த மக்களின் செலவு செய்யும் அளவை அதிகப்படுத்த வேண்டும். வருமான வரி செலுத்தும் அளவு அதிகமாக இருந்தால் நுகர்வு குறையும் என்பதால் வருமான வரி விலக்கு அளிக்கும் அளவை அதிகப்படுத்தும் நோக்கில் வருமானவரி விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
குறிப்பாக வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி படிகளையும், வருமான வரி செலுத்தும் வீதங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆனால், இறுதியான முடிவு என்பது பட்ஜெட் தேதிக்கு நெருக்கமாகவே எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய வருமானவரி செலுத்தும் முறை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதில் பெரிதாக வருமானவரி உச்சவரம்பு இல்லை சில வரிக்கழிவுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.
சில விலக்குகள், வரிக்கழிவுகள் புதிய வரிவிதிப்பு முறையில் இருந்ததால், பழைய வருமானவரி வதிப்பை பின்பற்றிய வரி செலுத்துவோர் பலரும் புதிய வரிசெலுத்தும் முறைக்கு மாறினர். இதுவரை வருமானவரி செலுத்துவோரில் 72 சதவீதம் பேர் புதிய வரிவிதிப்பு முறைக்கு மாறியுள்ளனர் என மத்திய நிதிஅமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 


கடந்த ஜூலை மாதம் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தப ட்ஜெட்டில் நிரந்த கழிவை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரம் வரை உயர்த்தினார். புதிய வரிவிதிப்பு முறையில் ஆண்டுக்கு ரூ. 3லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமானவரி விலக்கு இல்லை. 

இதையும் படிங்க: காங்கிரசுக்கு 'அடுத்த அடி' : டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி ஆதரவு; தனித்து களம் காண்கிறார், மாயாவதி


ஆண்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை வாங்குவோருக்கு 5 சதவீதமும், ரூ. 7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 10 சதவீதமும் வருமானவரி விதிக்கப்படுகிறது.
பட்ஜெட்டில் வரும் அறிவிப்பின்படி ஆண்டுக்கு ரூ.10 லட்சம்வரை ஊதியம் பெறுவோருக்கு தற்போது 10 சதவீதம் வருமானவரி விதிக்கப்படுகிறது. இது நீக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.10 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு விலக்கு அளிக்க ஆலோசித்து வருகிறது.

இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share