×
 

சின்னாபின்னமாகும் நிதிஷ் கட்சி- வக்ஃபு விவகாரத்தால் கொத்துக் கொத்தாய் வெளியேறும் தலைவர்கள்..!

உங்கள் மதச்சார்பற்ற பிம்பத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்பினேன். ஆனால் அதற்கு பதிலாக, முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றுபவர்களை நீங்கள் ஆதரித்துள்ளீர்

வக்ஃப் திருத்த மசோதா, 2024 பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, நிதிஷ் கலக்கமடைந்து வருகிறார். ஜேடியுவில் பல சீனியர் தலைவர்கள் இப்போது நிதீஷை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக, தலைவர்கள் ஜேடியு பெயர்ப் பலகையை வேரோடு பிடுங்கி உடைத்தனர். அவர்கள் முதல்வர் நிதிஷுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நிதிஷ்குமார் நம்பிக்கையை உடைத்துவிட்டதாக தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ராஜு நாயர், தப்ரேஸ் சித்திக் அலிகர், நதீம் அக்தர், முகமது ஷாநவாஸ் மாலிக் மற்றும் முகமது காசிம் அன்சாரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜேடியு தலைவர்கள் ராஜினாமா செய்வது, கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருவதால், கட்சியின் கவலைகளை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ராஜு நாயர் தனது ராஜினாமாவில் , ''வக்ஃப் திருத்த மசோதாவை ஜேடியு ஆதரித்ததால்தான் மிகவும் வேதனையடைந்தேன். முஸ்லிம்களை ஒடுக்கும் ஒரு கருப்புச் சட்டம் இது. வக்ஃபு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு ஆதரிக்கப்பட்ட பிறகு, நான் ஜேடியுவில் இருந்து ராஜினாமா செய்கிறேன். மேலும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நான் விடுபட்டுள்ளேன்'' என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: நிதிஷ்குமாருக்கு பெரும் பின்னடைவு: வக்ஃப் மசோதா ஆதரவால் இஸ்லாமிய தலைவர் ராஜினாமா..!

வெள்ளிக்கிழமை ஜே.டி.(யு) தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரிடம் தனது ராஜினாமா கடிதத்தில், வக்ஃப் திருத்த மசோதாவுக்கு கட்சி அளித்த ஆதரவு மதச்சார்பற்ற மதிப்புகளுக்கானது என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. உங்கள் மதச்சார்பற்ற பிம்பத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்பினேன். ஆனால் அதற்கு பதிலாக, முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றுபவர்களை நீங்கள் ஆதரித்துள்ளீர்'' தப்ரேஸ் ஹசன் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

மக்களவைக்குப் பிறகு, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2024, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 12 மணி நேரம் நீடித்த நீண்ட விவாதத்திற்குப் பிறகு, வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில், மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. மாநிலங்களவையில், வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. மாநிலங்களவையில் பேச காங்கிரசுக்கு 45 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: வக்ஃப் மசோதாவை யார் ஆதரிப்பது? யார் எதிர்ப்பது..? பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share