அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!
பாஜக அண்ணாமலையின் முக்கிய ஆதரவு கரமாக விளங்கும் பி.எல் சந்தோஷ், முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
தமிழகமே இன்று பெரும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளது காரணம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தை போர் தான்.
வாடா,போடா என ஒருமையில் ஆரம்பித்து நீ இங்கு வா, நான் அங்கு வருகிறேன், ஒத்தைக்கு ஒத்தைக்கு வரேன், என்ற ரீதியில் தரை லோக்கலாக இறங்கிவிட்டனர் இரண்டு கட்சி தலைவர்களும். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மும் மொழி கொள்கையை எதிர்த்து கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பதாகவும், இதற்கு முன்பாக கோ பேக் மோடி என சொல்லி வந்தோம். இனிமேல் கெட் அவுட் மோடி தான் என்று ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசினார்.
உதயநிதியின் இந்த பேச்சால் மிகவும் கடுப்பான அண்ணாமலை உலகத் தலைவர் மோடி, உலகத் தலைவர்களே வியந்து பார்க்கும் மிக முக்கியமான அசாதாரண தலைவர் எங்கள் தலைவர் மோடி, அவரைப் போய் நீ வா போ என்றும், கெட் அவுட் மோடி என்றும் ஒரு பிரதமரை கெட் அவுட் என்று சொல்வதும் நாகரிகமானது அல்ல, அதுவும் பதவி வகிக்கும் துணை முதலமைச்சர் பிரதமரை பார்த்து கெட் அவுட் என்று சொல்வது இந்திய ஜனநாயகம் முறைப்படி தவறான செயலாகும் என்று கூறினார். மேலும் வாடா போடா என உதயநிதியை ஒருமையில் மோசமாக விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: தப்பு பண்ணிட்டியே சிங்காரம்..! #GetOutStalin வெளுத்து வாங்கும் பாஜக..!
இந்த நிலையில் நேற்று கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைதள பக்கத்தில் ட்ரெண்டிங் ஆனது கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எக்ஸ் பக்கத்தில் திமுக சார்பில் ட்ரெண்டிங் செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் அண்ணாமலை உத்தரவின் பேரில் காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் ஆரம்பித்தனர் தற்போது வரை மட்டுமே ஆறு லட்சத்தை கடந்து அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது பாஜகவின் தாக்குதல். இந்த அதிரடி அரசியலை பார்த்த பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள் குறிப்பாக, பி.எல் சந்தோஷ் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் மிகுந்த குஷி ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பாக அண்ணாமலையின் முக்கிய ஆதரவு கரமாக விளங்கும் பி.எல் சந்தோஷ்,தமிழகத்தில் அறிவாலய சைபர் கைக்கூலிகள் காசு வாங்கிக் கொண்டு ஒரு நாள் முழுவதும் செய்ததை ஒரே மணி நேரத்தில் பாஜக தொண்டர்கள் செய்து முடித்து விட்டார்கள் என அண்ணாமலைக்கு ஆதரவாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அண்ணாமலைக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் பி.எல் சந்தோஷ் நேரடியாக களத்தில் இறங்கி எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளது பாஜகவினரையும் அண்ணாமலையையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளாதாம்.
இதையும் படிங்க: உலகத் தாய்மொழி நாள்.. மு.க.ஸ்டாலின், அண்ணாமலை கூறியது என்ன..?