திருப்பரங்குன்றத்தை வைத்து பாஜக போட்ட ஸ்கெட்ச்... தீய சக்தி என திட்டி தீர்த்த முத்தரசன்...!
திருப்பரங்குன்றம் மலையை ஏதோ திடீரென இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்துவிட்டது போன்ற மாயை உருவாக பாஜக முயல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை ஏதோ திடீரென இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்துவிட்டது போன்ற மாயை உருவாக பாஜக முயல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.
திருக்கோவிலூர் பகுதிக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “
இந்திய இளைஞர்களை இந்திய குடும்பத்தினரை அமெரிக்காவின் இராணுவ விமானத்தில் ஏற்றி கொண்டு வந்து இங்கே பஞ்சாபில் இறக்கி விடுகிறார்கள். இறக்கி விடுவது மட்டுமல்ல அவர்களது கை மற்றும் கால்களில் விலங்கிட்டு மிக அநாகரீகமான முறையில் உலகத்தில் எந்த நாடும் செய்யாத அநாகரிக செயலில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் அதன் காரணமாக மனரீதியானக துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் நியாயப்படுத்தி பேசுவது விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியோடு பிரதமருக்கு நல்ல நட்பு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், அவர் நண்பர் என்று சொல்கின்றார் இவருக்கு அவர் நண்பராக இருக்கின்ற காரணத்தினால் இந்தியர்கள் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதையும் படிங்க: மதக்கலவரத்தை தூண்ட முயற்சி.. எச்.ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்க தயாராகும் காவல்துறை!
தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் இங்கு மதக் கலவரங்கள் ஜாதிய மோதல்களுக்கு இடமில்லாத வகையில் ஒரு அமைதியான பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இங்கு மதரீதியாக கலவரத்தை உருவாக்கி அதன் மூலமாக தங்களின் குறுகிய அரசியல் ஆதாயத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருப்பரங்குன்றத்தை மையமாகக் கொண்டு ஆர் எஸ் எஸ் பாஜக சங்க்பரிவார் அமைப்புகள் நடத்தி வருகின்ற இந்த இயக்கங்கள் நல்லதல்ல அந்த இயக்கங்களை அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அந்த பகுதி மக்கள் ஏற்கவில்லை.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக வாழுகின்ற மக்கள் இங்கே பாரம்பரியமாக முருகன் வழிபாடு இருக்கிறது அதேபோன்று இஸ்லாமியர்களின் தர்காவும் அங்கே இருக்கிறது.
திடீரென இஸ்லாமியர்கள் அங்கு ஆக்கிரமித்து விட்டார்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ஒரு முயற்சியை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டிருப்பது மிக கடுமையான கண்டனத்திற்குரியது அந்த பகுதி மக்களை மிகப் பணிவன்போடு வேண்டி கேட்பது மத நல்லிணக்கத்தோடு இதுவரை எப்படி வாழ்ந்தோமோ அதே போன்று தொடர்ந்து வாழ்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தீய சக்திகளுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: இயல்பு நிலைக்கு திரும்பியது திருப்பரங்குன்றம்... ஆனா இந்த பகுதிக்குச் செல்ல மட்டும் பக்தர்களுக்கு தடை...!