×
 

அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு கொடுத்த பாஜக... இனி அவரோட கண்ட்ரோலில் தென் மாநிலங்கள்!!

அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக கடந்த மார்ச் மாதத் தொடக்கம் முதல் பேசப்பட்டு வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் பாஜக தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் ஆகியோர், மாநில தலைவர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பாஜக புதிய தலைவர் பதவியேற்பு விழா மிக பிரமாண்டமாக நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்தித்தார். இதற்கிடையே, தேர்தலில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த பரபரப்புக்கு இடையில் இன்று தமிழக பாஜக தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.  இதை அடுத்து பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இனி அதை எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்துக்குவாரு... அண்ணாமலை ஓபன் டாக்!!

அப்படியெனில் அண்ணாமைலையின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா? என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். முன்னதாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர்தான் அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு, திமுக ஃபைல்கள் என்கிற பெயரில், ஊழல் விவரங்களை வெளி கொண்டு வருவேன் என கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. ஒருபுறம் திமுகவுடன் மல்லுகட்டிய அண்ணாமலை மறுபுறம் அதிமுக உடனான கூட்டணியையும் முறித்துக்கொண்டார். அதன்பிறகு தற்போது தான் மீண்டும் நேற்று, உடைந்த கூட்டணி இணைந்தது. 

இதனிடையே அண்ணாமலையை பொறுத்தவரை, அவர் தலைவராக இருக்கும் வரை அதிமுக கூட்டணிக்குள் வராது என்று எடப்பாடி ஏற்கனவே கூறியதாக தெரிகிறது. இதனை உறுதிசெய்யும் வகையில் நேற்று நடந்த பாஜக தலைவருக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று உறுதி செய்யப்பட்ட பிறகே, அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்தார் என பேசப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை பாஜக வழங்கியுள்ளது. இதனால் அவர் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடாகவையும் சேர்த்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை கட்சி அவருக்கு கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: திமுகவை வேரோடு அகற்றுவோம்… நயினார் நாகேந்திரன் பதவியேற்பில் அண்ணாமலை சூளுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share