முதல்வருக்கு அது நடந்துடுமோன்னு பயம்... திமுகவை டரியல் ஆக்கிய தமிழிசை...!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துக் கொண்டிருக்கிறார் சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்கிறது என, ஆனால் தமிழ்நாட்டில் தினமும் ஒரு கொலை நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பிரச்சனையே இல்லையா? தமிழ்நாட்டில் தினம் ஒரு கொலை நடந்துட்டு இருக்குல்ல அதுக்கு என்ன பண்ணீங்க. முதலில் நீங்கள் அதைப் பாருங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துக் கொண்டிருக்கிறார் சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்கிறது என, ஆனால் தமிழ்நாட்டில் தினமும் ஒரு கொலை நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஐதராபாத்தில் கூட்டம் நடத்தப் போகிறாராம். தெலங்கானாவில் அவருடைய கட்சி தோத்துக்கொண்டிருக்கிறது. தெலங்கானா எம்எல்சி தேர்தலில் 4 இடங்களில் மூன்று இடங்களை பாஜக வென்றுள்ளது. நாடாளுமன்றத்தில் 8 இடங்களில் பாஜக வென்றுள்ளது,
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி ஊழல் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.. அடிச்சு சொல்லும் பாஜக..!
தமிழ்நாட்டில் தற்போது இருக்கற நிலைமையைப் பார்த்தால், நாளைக்கு எல்லாரும் உயிரோடு இருப்போமா? என்றே தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவுகிறது. ஒரு சாதாரண விவசாயியான குப்புசாமியின் மகன் அண்ணாமலையின் தலை ஏற்கவான்னு நான் சொல்றேன். ஆனால் திமுகவால் அப்படிப்பட்ட ஒரு சாதாரண தொண்டரோட மகனை அழைக்க முடியுமா?. முத்துவேல் கருணாநிதியோட மகனை தான் அழைக்க முடியும்.
கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசும் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் கூட்டணி கணக்குகளை எங்கேயோ இருந்து மற்றவர்கள் கூட்டிக்கொண்டிருக்கிறார்கள், விழிப்புடன் இருங்கள் என பேசியுள்ளார். அதாவது அவங்களுக்கு எதிரா யாரும் சேர்ந்துர கூடாதுன்னு ஒரு பயம் இருக்கு. அதனால் தான் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு அதிமுகவை ஏன் அழைக்கவில்லை. தெலங்கானாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் அழைத்தீர்கள் இல்லையா?. இங்க ஏன் யாரையும் கூப்பிடல. அதுக்கு காரணம் என்னவென்றால், நாங்கள் எல்லாம் சேர்ந்துவிடக்கூடாது என முதலமைச்சருக்கு பயமிருக்கிறது.
இதையும் படிங்க: ஷிவ் நாடாரின் ரூ.200 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் தில்லுமுல்லு: வீடியோ போட்டவரின் வீட்டிற்குள் அதிகாலையில் புகுந்த போலீஸார்..!