‘கொத்தடிமை, சங்கி, டம்ளர், ஓசி சோறு, ஓசிக..!’அரசியல் கட்சிகளை பிழிந்தெடுத்த ப்ளூசட்டை மாறன்..!
ஆக... அனைத்து ஆறுகளும் அந்தக் கடலை நோக்கித்தான் பயணிக்கின்றன.
திரைப்படங்களை விமர்சனம் செய்யும்போது நக்கல், நையாண்டி எனத் தனக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து புகழ் பெற்றவர் ப்ளூசட்டை மாறன். அதே பாணியில் சமீபகாலமாக அரசியல் கட்சிகளை தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்து வருகிறார் ப்ளூசட்டை மாறன்.
அவரது ஒரு பதிவில் ‘‘பாமக, தேமுதிக போன்றவை பாஜகவுடன் நேரடி கூட்டணியில் உள்ளன. சசீமான்.. பாஜகவின் Theme Partner ஆகிவிட்டதாக தமிழிசை கூறிவிட்டார். பனையூர் பண்ணையாரின் நடவடிக்கைகளை பார்த்தால் பி டீம் என தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக.. தற்போதைக்கு பிரிந்துவிட்டதாக காட்டிக்கொள்கிறது. நாளை மீண்டும் இணையலாம்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மீண்டும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல்.. இங்கே திமுக கணிசமான இடங்களை வென்றால்.. அவர்களுடன் இவர்கள் சேர்ந்தாலும் ஆச்சர்யமில்லை.
இதையும் படிங்க: திமுக- அதிமுகவை ஒழித்து... சீமான் -விஜய் அரசியல் மக்களுக்கு இருட்டுக்கடை அல்வாதான்… நீலம் போட்டு வெளுத்த ப்ளூசட்டை மாறன்..!
அதற்கு இப்படியான பதில்கள் வரலாம்; மீண்டும் ஒரு தேர்தலை தேசம் சந்திப்பது நல்லதலல. நாட்டின் நலன் கருதியே இந்த முடிவு. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் மாநிலத்திற்கான பலன்கள் கிடைக்கும். தமிழக நலனுக்காக மட்டுமே கை கோர்த்துள்ளோம். மற்றபடி கொள்கையில் எக்காரணம் கொண்டும் சமரசம் எனும் பேச்சுக்கே இடமில்லை. மக்களுக்கு இந்த கசப்பு மருந்தை தருவது.. அவர்களின் நன்மைக்கு மட்டுமே. மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி எனும் தாரக மந்திரத்தை காக்க நாங்களே சாட்சி.
ஆக... அனைத்து ஆறுகளும் அந்தக் கடலை நோக்கித்தான் பயணிக்கின்றன. ஆனால் இங்கே நாம்... கொத்தடிமை, சங்கி, டம்ளர், ஓசி சோறு, ஓசிக என சட்டையை கிழித்துக்கொண்டு இருக்கிறோம். மக்களும், தொண்டர்களும் எஜமானர்கள் அல்ல. வெறும் பகடைக்காய்கள்.
நேரடியாக அரசியல் ஆதாயம் இல்லாமல் அரசியல் பேசுவது வீண் வேலை தான். கொள்கைக்காக ஒரு கட்சியை ஆதரிப்போம். ஆனால், அவர்கள் வியூகம், ராஜதந்திரம் எனச் சொல்லி கொள்கையை காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள்.
அரசியல்வாதி எளிதாக கட்சி/கூட்டணி மாறிவிடுவார்கள். ஆனால் மக்கள்/தொண்டர்கள் கட்சி மாற அசிங்கப்பட்டு ஒரே கட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்’’எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமநாதபுரம் கொடுத்த பாடமே போதும்யா...! ஈரோடு கிழக்கில் ஓரமாய் 'ஒடுங்கும்' ஓ.பி.எஸ்..!