கைக்கு எட்டியத வாய்க்கு எட்டாம பண்ணிட்டாங்களே.. கும்பமேளா படகோட்டிக்கு ரூ.12 கோடிக்கு ஐ.டி. நோட்டீஸ்..!
மகாகும்பமேளாவில் 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய படகோட்டிக்கு ரூ.12.8 கோடி வரி செலுத்த வேண்டும் என்ற நோட்டீஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம் நதிக்கரையில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அன்று முதல் இந்த விழாவின்போது படகோட்டி ஒருவர் 45 நாட்களில் 30 கோடி ரூபாய் சம்பாதித்ததாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர், 130 படகுகளை வைத்திருந்த ஒரு குடும்பம், மகா கும்பமேளாவின் போது 45 நாட்களில் மொத்தம் 30 கோடி ரூபாய் சம்பாதித்தது. அதாவது ஒவ்வொரு படகும் 45 நாட்களில் தலா ரூ.23 லட்சம் சம்பாதித்து கொடுத்ததாகவும் நாள் ஒன்று 50 ஆயிரம் முதல் 52 ஆயிரம் ரூபாய் வரை அந்த படகுகள் வருமானம் ஈட்டி தந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
படகோட்டி பிந்து மஹ்ரா என்பவரை பற்றி தான் முதல்வர் அப்படி கூறியிருந்தார். அதை ஒப்புக்கொண்ட படகோட்டியும் தனக்கு கும்பமேளாவின் போது 30 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார். சாதாரணமான நாட்களில் ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை மட்டுமே வருவாய் ஈட்டிய நிலையில் கும்பமேளாவின் போது இது 50,000 ரூபாயாக அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி... அரசுடன் கிரிமினல்கள் தொடர்பு.. விசாரணை நடத்த வலியுறுத்தல்..!
இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிரிமினல்களுடன் உத்தர பிரதேச அரசுக்கு தொடர்பு என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. அது தொடர்பாக நீண்ட நாட்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது அவருக்கு வரி விதிக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் படகோட்டிக்கு வருமான வரித்துறை இடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்திருப்பதாகவும் 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 68 கீழ் 12.8 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றும் பல்வேறு ஊடக தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகிறது.
இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வரிவிதிப்பு சரிதானா? தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் அவர் பயன்படுத்திக் கொண்டார். அதற்கு இப்படியா? அதிர்ஷ்டமே அவருக்கு துரதிஷ்டவசமாக மாறிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
நிதி திட்டமிடுபவரும் செபி பதிவு செய்யப்பட்ட ஆய்வாளருமான ஏ.கே மந்தன் என்பவரும் இந்த படகோட்டி பற்றி சுட்டிக்காட்டி இருந்தார். பிரயாக்ராஜை சேர்ந்த ஒரு படகு ஓட்டுனர் தனது வாழ்நாள் முழுவதும் படகு ஓட்டி நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சாதாரணமான வருமானம் ஈட்டியதால் அவருடைய நிதி சூழ்நிலையில் வியத்தகு மாற்றத்தை சந்தித்தார்.
இந்த நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக அவருக்கு முப்பது கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த திடீர் வருமானம் மஹராவுக்கு வியப்பை அளித்தது. இந்த வருமானத்தின் காரணமாக அவர் இப்போது ஒரு வருடத்திற்குள் 12.8 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டிய மிகக் கடுமையான நிலைமையை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மஹரா தனது வாழ்க்கையில் இந்த புதிய நிதி அத்தியாயத்தை நோக்கி செல்லும் போது தனது வருமானத்தில் கணிசமான பகுதியில் வரிகளாக இழக்க நேரிடும் என்ற உணர்வு அவருடைய துயரத்தை அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த வரி விதிப்பு முறை பற்றி ஒருபோதும் அறிந்திறாத அவர் அதுவும் வரி அடுக்குகள் அல்லது வருமான வரி தாக்கல் செய்தது பற்றி ஒருபோதும் அறியாத ஒருவர் தற்போது உயர்மட்ட ஒரு தொழிலதிபர் போல் பெரிய அளவில் வரிச்சுழலில் சிக்கிக் கொண்டார். அவருடைய சொத்து ஒரே நாள் இரவில் நிதி கனவாக மாறிவிட்டது.
இவ்வளவு பெரிய பணம் சம்பாதித்தது முதலில் அவருக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது. இப்போது அதில் பெரும் பகுதியை இழப்பது இன்னும் கூடுதல் அதிர்ச்சியை கொடுக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அத்துடன் அவர் சில கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்
இந்தப் படகோட்டியை போல திட்டமிடப்படாத அதிக வருமானம் வைத்து அவர்களுக்கு ஒரு தனி வரி அமைப்பு இருக்க வேண்டுமா? அல்லது மற்றவர்களைப் போலவே அவருக்கும் வரி விதிக்கப்பட வேண்டுமா? இந்த அமைப்பு ஒரு எளிய விதியின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா? நீங்கள் யாராக இருந்தாலும் பெரிய அளவில் சம்பாதிக்கவும் பெரிய அளவில் பணம் செலுத்தவும் வேண்டுமா ?
இது மற்றொரு பெரிய கேள்வியை எழுப்புகிறது. இது நியாயம் தானா? வருமான வரி அமைப்பு எளிய ஒரு விதியின் அடிப்படையில் செயல்படுகிறதா? நீங்கள் யாராக இருந்தாலும் பெரிய அளவில் சம்பாதிக்கவும் பெரிய அளவில் பணம் செலுத்தவும் இன்னும் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் படகோட்டிக்கு பூஜ்ஜிய நிதி கல்வி அறிவு கூட இல்லை. வரி விலக்குகள் மறு முதலீடுகள் அல்லது சொத்து பாதுகாப்பு பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. யாராவது அவரை வழிநடத்தி இருந்தால் ஸ்மார்ட் வரித் திட்டத்தின் மூலம் மில்லியன் கணக்கான ரூபாய் அவர் சேமித்து வைத்திருக்க முடியும். ஆனால் அது ஏன் நடந்தது என்று புரியாமல் 12.8 கோடி ரூபாய் வரிகளை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறினார்.
முன்னதாக இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் மற்ற தொழிலதிபர்களை போலவே படகோட்டியின் குடும்பமும் வருமான வரிக்கு வரி செலுத்துவார்கள் என்று நம்புவதாக கூறினார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி... அரசுடன் கிரிமினல்கள் தொடர்பு.. விசாரணை நடத்த வலியுறுத்தல்..!