×
 

கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயிலில் வந்த அச்சுறுத்தல்.. கலவரமான ஆசிரியர்கள்..

அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர் பீதி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. மேலும் இதே வளாகத்தில் மத்திய அரசின் பி.எம்.கேந்திரிய வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். வழக்கம் போல் மாணவர்கள் இன்று பள்ளிக்குச் சென்ற நிலையில், அவர்களின் பெற்றோருக்கு திடீரென பள்ளியில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. 

அதில் உடனடியாக உங்கள் குழந்தைகளை வந்து அழைத்து செல்லுங்கள். இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பரபரப்பான பெற்றோர் உடனடியாக பள்ளி வளாகத்திற்கு சென்று தங்களுடைய குழந்தைகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது நிர்வாக காரணங்களால் மாணவர்களை பள்ளியிலிருந்து அனுப்பி வைத்ததாக மட்டுமே தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: ஒரே ஒரு இமெயில்... விறுவிறுவென தனியார் பள்ளி முன்பு குவிந்த பெற்றோர்கள்... மதுரையில் உச்சகட்ட பரபரப்பு! 

இந்நிலையில் ஐ.எம்.எஸ் ராஜாளி இந்திய கடற்படை விமானதள வளாகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது முழு சோதனை நடைபெற்று வருவதாக இந்திய கடற்படை விமானதள அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளின் ஆலோசனையின் படி குழந்தைகளை பெற்றோர்களுடன் உடனடியாக பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தொடர்ச்சியாக இந்த கடிதம் மின்னஞ்சல் வாயிலாக பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூடுதல் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதெல்லாம் முடியவே முடியாது... விஜயலட்சுமி விவகாரத்தில் வசமாக சிக்கிய சீமான்... ஐகோர்ட் அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share