மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..! புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் தீவிர சோதனை..!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகை, முதலமைச்சரின் வீடு, முக்கிய உணவகங்கள் என பல இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாக்கி வருகிறது.
தற்போது, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் தகவல் வந்ததை அடுத்து தன்வந்திரி நிலைய காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் வீடு முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடூரமான பதிலடி கொடுப்போம்..! பழி தீர்க்காமல் இந்தியா ஓயாது..! பிரதமர் மோடி சூளுரை..!
மேலும், கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சுத் துணை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..! மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை..!