×
 

இளம்பெண் ஆணவக்கொலை.. செய்தது யார்..? விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்..!

திருப்பூரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணனே தங்கையை ஆணவப்படுகொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தை சேர்ந்த வித்யா என்ற பெண் கடந்த மார்ச் 30-ம் தேதி தூங்கி கொண்டிருந்த தலையில் பீரோ விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் வித்யா இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்காமல் வித்யாவை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.

இதனிடையே, மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வெண்மணி பெண் கேட்டு வித்யா வீட்டிற்கு சென்ற நிலையில், வெவ்வேறு ஜாதி காரணங்களாலோ அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கேம்ப் ஃபயரில் எரிந்த உடல்... எடுக்க எடுக்க வந்த உடல் பாகங்கள்... கொடைக்கானலில் கொடூரம்!!

இதனால் பெண் வீட்டில் அடிக்கடி தகராறும் நடந்துள்ளது. இந்த நிலையில் தான் வித்யா மர்மமான முறையில் இறந்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்தா நிலையில் தனது காதலி பலியானதால் வெண்மணிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், தங்கை வித்யாவை அண்ணனே கொலை செய்தது உறுதியாகியுள்ளது. வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை வித்யா காதலித்ததால், கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் தங்கையை அண்ணனே ஆணவப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துப்பாக்கியால் நாயை கொன்ற நபர்.. அதிரடி காட்டிய ப்ளூ கிராஸ் அமைப்பினர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share