தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்..! ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்..!
தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.ராணுவ சீருடையில் வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு இதற்கு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
உலக நாடுகளையே இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நிலையில், ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கையில் துப்பாக்கி.. குரூர புத்தி.. மக்களை சுட்டப்படியே ஓடும் தீவிரவாதியின் முதல் புகைப்படம்..!
வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசாரின் பாதுகாப்பு தீவிரப்படுத்த பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலைக்குலைய வைத்த தீவிரவாத தாக்குதல்..! கரம் கொடுக்கும் சவுதி அரேபியா..!