×
 

கோவையில் 10 வயது சிறுவனை கடத்த முயற்சி.. சுற்றி வளைத்த போலீசார்!

கோவையில் 25 லட்சம் ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திச் சென்று டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக நவீன் என்பவர் கார் ஓட்டுநராக பணியில் சேர்ந்துள்ளார். கார் ஓட்டுநரான நவீன் எப்பொழுதும் ஸ்ரீதரின் மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்த பின்னர் மீண்டும் டியூஷனுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், சம்பவத்தன்று நவீன் வழக்கம் போல ஸ்ரீதரன் 10 வயது மகனை டியூஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 நீண்ட நேரம் ஆகியும், நவீன் திரும்பி வராததால் சந்தேகமடைந்த ஸ்ரீதர் நவீன் இன் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.  நீண்ட நேரம் ஆகியும் நவீன அழைப்பை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் நீண்ட நேரத்துக்கு பின்னர் நவீன், ஸ்ரீதருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது மகனை கடத்தி வைத்திருப்பதாகவும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விடுபட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் மகனை கொலை செய்வது செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திய இளைஞர்.. சிறையில் அடைத்த போலீசார்..

 இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி போலீசிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணை தீவிர படுத்திய போலீசார் முதற்கட்டமாக நவீன் தொலைபேசி எண்ணை ட்ராக் செய்துள்ளனர். அப்போது அவர் பவானியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பவானிக்கு வரை இந்த போலீசார் நவீனின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், அவரை மடக்கி பிடித்தனர். மேலும் நவீன் உடன் இருந்த 10 வயது சிறுவனையும் பத்திரமாக போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எச்சை சோறுன்னு பேசிட்டு இப்போ மன்னிப்பா சிவாஜி.கி.மூ..? ஆத்திரம் அடங்காத இஸ்லாமியர்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share