×
 

ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்… சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீடுகளில் சிபிஐ சோதனை..!

20 ஆயிரம் கோடி மதிப்பிலான மகாதேவ் சத்தா ஊழல் பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேலின், பிலாய் மற்றும் ராய்ப்பூரில் உள்ள அவரது மாளிகைகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 5:30 மணிக்கு, முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீடு உட்பட, 4 காவல்துறை அதிகாரிகளின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. தகவல்படி சிபிஐ குழு,  ஐபிஎஸ் அபிஷேக் பல்லவ், ஐபிஎஸ் ஆரிஃப் ஷேக், ஐபிஎஸ் ஆனந்த் சாப்ரா மற்றும் கூடுதல் எஸ்பி அபிஷேக் மகேஸ்வரி ஆகியோரின் வீடுகளிலும் இந்த சோதனை மேற்கொண்டு வருகிறது. 

மகாதேவ் சத்தா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் ஆலோசகர் வினோத் வர்மா, எம்எல்ஏ தேவேந்திர யாதவ் ஆகியோரின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான மகாதேவ் சத்தா ஊழல் பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் அரசும், அதன் அதிகாரிகளும் மகாதேவ் சத்தா ஊழலில் ஈடுபட்டதாக  குற்றம் சாட்டப்பட்டனர். அதன் பிறகு பூபேஷ் பாகேல் மீது 500 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. முன்னதாக, சுபம் சோனி ஒரு வீடியோவை வெளியிட்டு முதல்வர் பாகேலை குற்றம் சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்.. 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை.. தொடரும் துப்பாக்கிச் சண்டை..!

பூபேஷ் பாகேல் தனது எக்ஸ்தளப்பதிவில், ''இப்போது சிபிஐ வந்துவிட்டது. ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் குஜராத், அகமதாபாத்தில் நடைபெறவுள்ள ஏஐசிசி கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட 'வரைவுக் குழுவின்' கூட்டத்திற்காக முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று டெல்லி செல்ல உள்ளேன். அதற்கு முன்பே, சிபிஐ ராய்ப்பூர் மற்றும் பிலாய் இல்லத்தில் சோதனை நடத்தி வருகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் தகவல் தொடர்புத் தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா இதுகுறித்து, 'பாஜகவின் மோடி அரசு, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேலின் வீட்டிற்கு சிபிஐயை அனுப்பியுள்ளது. சிபிஐ ராய்ப்பூர் மற்றும் பிலாய் இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தி வருகிரது'' எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, மார்ச் 10 ஆம் தேதி, இதே வழக்கு தொடர்பாக துர்க் மாவட்டத்தில் 14 இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. இதில் பூபேஷ் பாகேலின் வீட்டிலும் அவரது மகன் சைதன்யா பாகேலின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் செயல்படும் அமலாக்கப் பிரிவு, சைதன்யா பாகேலின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் லட்சுமி நாராயண் பன்சால் என்ற பப்பு பன்சலுடன் தொடர்புடைய இடங்களையும் சோதனை செய்தது.

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. 2026 மார்ச் 31 தான் கடைசி.. நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும்.. அமித்ஷா சூளுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share