கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா? காரோடு சேர்த்து ரோடு போட்ட கான்ட்ராக்டர்.. கோர்ட்டுக்கு நடக்கும் கார் ஓனர்..!
ஆந்திராவில் சாலை அமைப்பதற்கு காரை எடுக்காததால் காருடன் சேர்த்தே ஒப்பந்ததாரர் ரோடு போட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலம் பாபட்லா மாவட்டத்தின் தேசாய்பேட்டை பஞ்சாயத்தில் உள்ள கிரிபட்டணம் கிராமத்தில் 68 மீட்டருக்கு சிமென்ட் சாலை அமைக்க முடிவானது. இதற்காக 4.10 லட்சம் ரூபாய் கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், சாலை அமைக்க அளவீடுகள் எடுக்கப்பட்டன.
ஆனால் இந்த மாதம் 9 ஆம் தேதி, அதே தெருவைச் சேர்ந்த யர்ரா ரூபானந்த் என்பவர் வேடபாலம் தாசில்தாரிடம் சாலை போடும் அளவீடுகளில் வித்தியாசம் இருப்பதாகவும், சாலையின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்கக் கோரியும் மனு அளித்தார். அதன் பிறகு, அவர் தனது குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வேறு இடங்களுக்குச் சென்றதாக கூறப்படுகிறாது. அப்போது யர்ரா ரூபானந்தின் கார் சாலையிம் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த மாதம் 12 ஆம் தேதி, யர்ரா ரூபானந்த் ஊரில் இல்லாத நேரத்தில் சாலையை சற்று அடைத்து வைத்திருந்த அவரது காரை நகர்த்தாமல் ஒப்பந்ததாரர் சிமெண்ட் சாலையை அமைத்தார். இதில் காரின் டயர்கள், காரின் பக்கவாட்டில் இருந்து சாலை அமைக்கப்பட்டிருந்ததால், சிமெண்டில் சிக்கிக் கொண்டன. சாலை அமைக்கப்பட்ட பிறகு ரூபானந்த் வீட்டிற்கு வந்துபார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தனது காரை அகற்றாமலே, அதுவும் தனக்குத் தெரிவிக்காமலே சாலை அமைத்த ஒப்பந்ததாரர் இடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தனது குடும்பத்தினர் இல்லாதபோது சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேடபாலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: மாணவிகளிடம் அத்துமீறிய தலைமையாசிரியர்.. ஹோலி பண்டிகையில் இப்படியா? கண்ட இடத்தில் கலர் பூசி அட்டூழியம்..!
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரு வருடத்திற்கு முன்பே சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இருந்த போதிலும் கார் உரிமையாளர் ரூபானந்த் சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டு இருந்த அவரது காரை எடுக்கவில்லை. இதனால்தான் ஒரு வருடமாக சாலை அமைக்கப்படவில்லை.
கார் இருந்த இடம் தனது சொந்த நிலமாக உரிமை கோரி சாலை கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக இருந்ததாலும், ஒப்பந்ததாரர் காருக்குப் பக்கத்தில் சாலை அமைக்க வேண்டியிருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். சாலை போடப்பட்டால் தனது கார் சேதமடைந்ததாக அவர் இப்போது கூறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஒப்பந்ததாரர் கூறிய போதே காரை அகற்றி இருந்தால் இது போன்று ஏன் நடக்க போகிறது என்றும் அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தனது வீட்டின் முன் உள்ள நிலத்தை உரிமை கொண்டாடிய கார் ஓனர், ஊரில் இல்லாத போது அவரது காருடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அதிகாரிகளின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை வைத்து நெட்டிசன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்மாவே எனக்கு விஷம் கொடுத்தாங்கடா.. ஆந்திராவில் 17 வயது சிறுமி மர்ம மரணம்.. கௌரவ கொலை காரணமா?