பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி - அதிரடி ஆக்ஷனில் இறங்கிய பிரதமர் மோடி
தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானுடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேறவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க! தரமான பதிலடி இருக்கு.. அண்ணாமலை பரபர பேச்சு..!
மேலும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பாகிஸ்தானியர்கள் இனி இந்தியா வர விசா வழங்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானில் இந்தியர்கள் யாரேனும் இருந்தால் நாடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2000 ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டியா? மத்திய அரசு விளக்கம்..!