பதிலுக்கு பதில்..! சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..! ஆக்ஷனில் இறங்கிய பாதுகாப்பு படை..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மூன்று மாவோயிஸ்டுகளை சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். பைசரான் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் இருந்த இடத்துக்குள் தீவிரவாதிகள் திடீரென நுழைந்தனர். அங்கிருந்தவர்களில் 26 பேரை காட்டுமிராண்டி தனமாக சுட்டு வீழ்த்தினர். குடும்பத்தினர் கண் முன்னே ஒவ்வொருவராக கொலை செய்யபப்ட்டனர். உறவுகளை இழந்து தவித்த கொடூர காட்சிகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியைடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரும் ஆங்காங்கே தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி வருகின்றனர். நேற்று பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நிகழ்ந்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நெஞ்சை உலுக்கிய தீவிரவாத தாக்குதல் சம்பவம்..! காஷ்மீரில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!
அப்போது பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் அதிரடியாக சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஒழிக..! பஹல்காம் சம்பவத்தை கண்டித்து வெடிக்கும் போராட்டம்..! கொந்தளித்த மக்கள்..!