×
 

ஒரு பிரியாணிக்காக ரூ.8 லட்சம் செலவு செய்ய பெண்... எல்லாம் கணவனால் வந்த வினை!!

மும்பையில் ஒரு பெண் 150 முதல் 200 ரூபாய் மதிப்புள்ள பிரியாணி வாங்க ரூ.8 லட்சம் செலவு செய்துள்ளார்.

இன்றைக்கு பிரியாணி பலரது விருப்பமான உணவாக உள்ளது.

பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு பிரியாணி. பிரியாணி என்றாலே எவ்வளவு தூரமாக இருந்தாலும் பிரியாணிக்காக செல்வோரும், செலவு செய்பவர்களும் உள்ளனர். திருமண வீட்டு பிரியாணி என்றால் சொல்லவே வேண்டாம். பிரியாணியை அவசரப்படாமல் சாப்பிடும் சிலர் அதற்காக செலவு செய்ய அஞ்சமாட்டார்கள்

அந்த வகையில் மும்பையில் ஒரு பெண் 150 முதல் 200 ரூபாய் மதிப்புள்ள பிரியாணி வாங்க ரூ.8 லட்சம் செலவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி.. நைசாக பேசி ரூமிற்கு அழைத்து சென்ற கயவன்.. கூட்டு பாலியல் கொடுமை செய்த கும்பல்..!

மும்பை குர்லா பகுதியில் 34 வயது பெண், கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் மகளும், 6 மாத மகனும் உள்ளனர். அந்த பெண் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி சாப்பிட விரும்பினா். இதையடுத்து பெண்ணின் கணவர் வீட்டருகே உள்ள கடையில் இருந்து சிக்கன் பிரியாணி வாங்கி வந்தார். அனைவரும் பிரியாணியை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பிரியாணியில் கிடந்த கோழி எலும்பு துண்டு பெண்ணின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. உடனடியாக அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது பெண்ணின் தொண்டையில் 3.2 செ.மீ. அளவிற்கு கோழியின் எலும்பு சிக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் தொண்டையில் சிக்கியிருந்த எலும்பை எடுக்க முடிவு செய்தனர். அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த போது தொண்டையில் சிக்கிய எலும்பு துண்டு மாயமாகி இருந்தது.

எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எலும்பு மார்பு, வயிறு பகுதியிலும் இல்லை. மேல் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எலும்பு துண்டு உணவு குழாய் வழியாக மூக்கு பகுதியில் சிக்கியிருந்தது. வழக்கமாக தொண்டையில் சிக்கிய பொருட்கள் மேல் பகுதிக்கு செல்லாது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக பெண்ணின் தொண்டையில் சிக்கிய எலும்பு மூக்கு பகுதியில் நகர்ந்து இருந்தது.

இதனால் 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய அறுவை சிகிச்சை எலும்பு துண்டு மூக்கில் சிக்கியதால் 8 மணி நேரத்திற்கு மேல் போராட வேண்டியிருந்தது. அந்த பெண்ணுக்கு மருத்துவ செலவு மட்டும் ரூ.8 லட்சத்தை எட்டியது.

இதில் மருத்துவமனை நிர்வாகம் நன்கொடை மூலம் பெண்ணின் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வரை நிதி திரட்டியது. 200 ரூபாய் மதிப்புள்ள பிரியாணி சாப்பிட்டு ரூ.8 லட்சம் வரை செலவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளியின் கோரிக்கை மனு.. ஏற்க மறுத்த அமெரிக்க உச்சநீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share