குழந்தைகளின் கற்கும் திறன் மீளவில்லை: கொரோனா லாக்டவுனில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்கிறது: கல்வி அறிக்கையில் தகவல்
கொரோனா லாக்டவுனில் பள்ளிகள் அனைத்தும் நாடுமுழுவதும் மூடப்பட்டதன் விளைவு குழந்தைகளின் கற்கும் திறனில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த பாதிப்பிலிருந்து குழந்தைகள் 4 ஆண்டுகளாகியும் இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறார்கள் என்று 2004ம் ஆண்டு கல்வி அறிக்கையில்(ASER) தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கற்கும் திறன் கொரோனா லாக்டவுனுக்குப்பின் மோசமாகக் குறைந்தது. அந்த கற்கும் திறன் கடந்த 4 ஆண்டுகளில் சிறிதளவுதான் மீண்டுள்ளது எனக் கல்வி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 605 கிராமங்களில் உள்ள 6.50 லட்சம் குழந்தைகளிடம் அவர்களின் அடிப்படை வாசிக்கும் திறன், கணிதம் போடும் திறன் கொரோனாவுக்குப்முன், கொரோனா லாக்டவுனுக்குப்பின் என ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 3ம்வகுப்பிலும், 5ம் வகுப்பிலும் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தாய்மொழியிலேயே 2-ம் வகுப்பு பாடங்களைப் படிக்க திணறுகிறார்கள், எளிமையான கணிதத்தை செய்வதற்கும் சிரமப்படுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
2018ம் ஆண்டு கல்வி அறிக்கையில் அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 20.9% மாணவர்கள் 2ம்வகுப்பு பாடங்களைப் படிக்கிறார்கள் எனத் தெரியவந்தது, இந்த சதவீதம் 2022ம் ஆண்டில் 16.3% ஆகக் குறைந்தது பின்னர் 2024ல் 23.4 % ஆக உயர்ந்தது. ஆனால், இப்போதைய நிலவரப்படி 76.6% சதவீத 3ம் வகுப்பு மாணவர்கள் இன்னும் படிக்க சிரமப்படுகிறார்கள் என்று அர்த்தம். 5-ம்வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இதே 2ம் வகுப்பு பாடங்களைக் கொடுத்தால், அவர்களால் இன்னும் அதை படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். 2018ம் ஆண்டில் 5-ம் வகுப்பு மாணவர்களில் 44.2 சதவீதம் பேர் 2ம்வகுப்பு பாடங்களை படிக்கும் திறன் பெற்றிருந்த நிலையில் 2022ம் ஆண்டில் 38.5% எனக் குறைந்தது, 2024ம் ஆண்டில் 44.8 சதவீதமாகக் இருக்கிறது இந்த ஆய்வின் முடிவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 67.5% பேரால் 2ம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடிகிறது.
குழந்தைகளின் அடிப்படை கணித்திறனும் பரிசோதிக்கப்பட்டது. எண்களை நினைவில் வைத்திருத்தல், இரட்டை இலக்க எண்களை கழித்தல், கடன்பெறுதல், வகுத்தல் என அடிப்படை கணிதத்திறந் பரிசோதிக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறன் கணிசமக உயர்ந்துள்ளது. அதேசமய், 3ம்வகுப்பில் படிக்கும் 3 மாணவர்களில் 2 பேர், இன்னும் கழித்தல் கணக்குகளை சரிவர செய்யமுடியாமல் இருக்கிறார்கள். 5-ம் வகுப்பு மாணவர்கள் வகுத்தல் கணக்குகளை செய்ய சிரமப்படுகிறார்கள். 2018ம் ஆண்டில் 27.9% சதவீதம் உயர்ந்தநிலையில் தற்போது 30.7% உயர்ந்துள்ளது. இன்னம் 70% மாணவர்கள் கணிதத்தில் மந்தமாக உள்ளனர்.
இதையும் படிங்க: பிராமண இளம் தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால், ரூ.1 லட்சம் பரிசு: சர்ச்சை எழுந்ததால், அதிகாரி விளக்கம்...
8-ம் வகுப்பு மாணவர்களிடையே அடிப்படை கணிதத்திறன் சற்று அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் 44.1% இருந்தநிலையில் 2024ம் ஆண்டில் 45.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குழந்தைகள் பாடங்களை வாசிக்கும் திறனில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமாக வளர்ச்சி இருக்கிறது. 2-ம் வகுப்பு பாடங்களை படிக்கும் திறன் இமாச்சலப்பிரதேசம், பீகாரில் குழந்தைகளின் திறன் 4 முதல் 5.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒடிசா, ஹரியானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 6 முதல் 7.9 சதவீதம் முன்னேறியுள்ளது தமிழகம், உ.பி. குஜராத், உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் குழந்தைகளின் வாசிக்கும் திறன் 10 சதவீதம்அளவு முன்னேறியுள்ளது. கொரோனாவுக்குப்பின் குழந்தைகளின் கற்கும் திறன், வாசிக்கும் திறன் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி 3மாத சிறப்பு வாசிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பதின்வயது அதாவது 14முதல் 16வயதுள்ள சிறுவர்களில் 89% பேருக்கு வீட்டில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்தும், எவ்வாறு இயக்குவது குறித்தும் தெரிந்துள்ளது, 31.4% மாணவர்கள் சொந்தமாகவே ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.82 சதவீத குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், 57% பேர் கல்விக்காக மட்டும்ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாகவும், சிலநேரங்களில்தான் சமூக வலைத்தளதுக்காக பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
76.9 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனில் அலாரம் வைக்கவும், 79.3 % பேர் ஏதேனும் தகவல்களை தேடவும், 87% மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்கள் குறித்த வீடியோவைப் பார்க்கவும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். 92.1 சதவீதம் பேர் வீடியோக்களை வாட்அஸ் அல்லது டெல்கிராமில் பகிரவும் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை சிறுமிகளைவிட சிறுவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஒரு ப்ரோபைலை எவ்வாறு மறைத்து வைப்பது என 62 சதவீதம் சிறுவர்களுக்கு தெரிந்துள்ளது, அந்த ப்ரோபைலை யாரும் பார்க்காத வகையில் பாதுகாக்க 55.2% பேருக்கு தெரிந்துள்ளது, 57.7 % பேருக்கு எவ்வாறு பாஸ்வேர்டை மாற்றுவது எனத் தெரிந்துள்ளது
இவ்வாறு கல்வி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில், கொரோனாவை போல் அச்சுறுத்தும் புதிய வைரஸ்: "பீதி வேண்டாம்" என்கிறது, இந்தியா